சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. இவருக்கு சமூகலைதலங்களில் ரசிகர்கள் அதிகம். இவர் தனது புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் எதில் பதிவிட்டாலும் அது ரகிகர்கள் மத்தியில் வைரலாக பரவும். சமீபத்தில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த விழாவில் எடுக்கப்பட்ட  சாராவின் புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவியது.


இதை தொடர்ந்து, பலரும் சாரா பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளதாக கிசுகிசுக்களை பரப்பிவிட்டனர். சாரா மும்பையில் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்தவர். தன் அம்மாவை போன்று லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தற்போது வெற்றிகரமாகப் படிப்பை முடித்து பட்டமும் வாங்கிவிட்டார். மகளின் இந்தப் பெருமித தருணத்தைக் காண சச்சின் மற்றும் அஞ்சலி லண்டன் சென்றனர்.