New Wage Code: இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளன. இருப்பினும் பல நிறுவனங்கள் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை இருந்தபோதிலும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பளம் அதிகரித்ததால், ஊழியர்களின் டேக் ஹோம் ஊதியமும் அதிகரிக்கும் என நீங்கள் மகிழ்ந்தால், அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை. ஏனெனில் புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம், அதாவது, டேக் ஹோம் சம்பளம், குறைவது மட்டுமல்லாமல், வரிச்சுமையும் அதிகரிக்கக்கூடும்.


அடிப்படை சம்பளம் அதிகரிக்கும், கொடுப்பனவுகள் குறைக்கப்படலாம்


ஒரு ஊழியரின் Cost-to-company (CTC)-யில் மூன்று முதல் நான்கு கூறுகள் உள்ளன. அடிப்படை சம்பளம்  (Basic Salary), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பி.எஃப் போன்ற ஓய்வூதிய சலுகைகள், கிராச்சுட்டி மற்றும் ஓய்வூதியம் மற்றும் எல்.டி.ஏ போன்ற வரி சேமிப்பு கொடுப்பனவுகள் மற்றும் பொழுதுபோக்கு கொடுப்பனவு.


இப்போது புதிய ஊதியக் குறியீட்டில், எந்தவொரு சந்தர்பத்திலும் கொடுப்பனவுகள் மொத்த சம்பளத்தில் 50% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு ஊழியரின் சம்பளம் மாதத்திற்கு ரூ .50,000 என்றால், அவரது அடிப்படை சம்பளம் ரூ .25,000 ஆகவும், அவரது கொடுப்பனவுகள் மீதமுள்ள ரூ .25,000 ஆகவும் இருக்க வேண்டும். அதாவது, இது வரை அடிப்படை சம்பளத்தை 25-30 சதவீதமாக வைத்து, மீதமுள்ள பகுதியில் மற்ற கொடுப்பனவுகளை வைத்திருந்த நிறுவனங்கள், இனி அடிப்படை சம்பளத்தை 50 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில், புதிய ஊதியக் குறியீட்டின் விதிகளைச் செயல்படுத்த நிறுவனங்கள் (Private Companies) பல கொடுப்பனவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும்.


ALSO READ: Basic Salary Hike: ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கும், அக்டோபர் 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றம்


ஓய்வு பெற்றபின் கிடைக்கும் தொகை அதிகரிக்கும் 


வருங்கால வைப்பு நிதி (Provident Fund) மற்றும் கிராச்சுட்டி ஆகியவை ஊழியரின் அடிப்படை சம்பளத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. அடிப்படை சம்பள உயர்வுடன், இந்த இரண்டு கூறுகளின் பங்களிப்பும் அதிகரிக்கும். அதாவது, ஊழியரின் ஓய்வூதிய நிதி அதிகரிக்கும், ஆனால் அவரது டேக் ஹோம் சம்பளம் குறையும். ஏனென்றால் இப்போது ஒரு பெரிய பகுதி பி.எஃப் மற்றும் கிராச்சுட்டிக்கு செல்லத் தொடங்கும்.


இதை ஒரு எடுத்துக்காட்டுடன் புரிந்துகொள்வோம். ஒரு ஊழியரின் சம்பளம் ரூ .1 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இவரது அடிப்படை சம்பளம் ரூ .30,000. ஊழியர் மற்றும் நிறுவனம் இருவரும் பி.எஃப்-க்கு தலா 12 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. அதாவது, இருவரும் ரூ .3600 பங்களிக்கின்றனர். ஆகையால் ஊழியரின் டேக் ஹோம் சம்பளம் மாதம் ரூ .92800 ஆக இருக்கும். ஆனால் அடிப்படை சம்பளம் ரூ .50,000 ஆக அதிகரிக்கும் போது, ​​கையில் வரும் சம்பளம் ரூ .88000 ஆக இருக்கும். அதாவது மொத்தம் ரூ .4800 ஒவ்வொரு மாதமும் குறைக்கப்படும். இதேபோல், கிராச்சுட்டியின் அளவும் அதிகரிக்கும்.


வரி மீது தாக்கம் ஏற்படும் 


புதிய ஊதியக் குறியீடு (New Wage Code) அமல்படுத்தப்பட்ட பின்னர், ஊழியர்களின் சம்பள அமைப்பு மாறும். இது சம்பளம் அதிகமாக இருக்கும் ஊழியர்களின் வரிச்சுமையை அதிகரிக்கும். ஏனெனில் அவர்களின் கொடுப்பனவுகள் அனைத்தும் சி.டி.சி.யின் 50 சதவீதத்திற்குள் சேர்க்கப்பட வேண்டும். அதேசமயம் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு குறைந்த வரி பாதிப்பு இருக்கும். பி.எஃப் மீதான அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கும். 1.5 லட்சம் வரை பங்களிப்புக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். இது அவர்களின் வரிச்சுமையைக் குறைக்கும்.


ALSO READ:New Wage Code: இனி வாரத்தில் நான்கு வேலை நாட்கள் மட்டுமே..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR