முந்துங்கள்: JIPMER-ல் வேலை... ₹2 லட்சம் வரை ஊதியம்!
புதுவை JIPMER மருத்துவ கல்லூரியில் காலியாகவுள்ள பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக JIPMER தெரிவித்துள்ளது!
புதுவை JIPMER மருத்துவ கல்லூரியில் காலியாகவுள்ள பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக JIPMER தெரிவித்துள்ளது!
JIPMER (Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research) மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள பணிகளை நிறப்புவதற்கு JIPMER-ன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் (jipmer.puducherry.gov.in) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இந்த பணிநிறப்பு முகாமில் 53 பணியிடங்கள் பூர்த்தி செய்ய JIPMER திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பணியமர்த்தப்படும் மருத்துவர்களுக்கு ₹2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MD அல்லது இதற்கு இணையான படிப்பினை முடித்திருத்தல் வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகுதி உடையவர்கள் வரும் அக்டோபர் 26-ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமாய் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்...
JIPMER-ன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் jipmer.puducherry.gov.in-க்கு செல்லவும்.
முகப்பு பக்கத்தில் உள்ள “Apply online for faculty posts of AIIMS Nagpur” என்ற இணைப்பை பின்தொடரவும்.
செயல்பாட்டில் உள்ள eMail முகவரி கொண்டு புதிய கணக்கினை உறுவாக்க வேண்டும்.
பின்னர் உறுவாக்கப்பட்ட கணக்கின் முகவரியினை கொண்டு jipmer.puducherry.gov.in பக்கத்தில் மீண்டும் உள்நுழையவும்.
கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
பின்னர் Submit பொத்தானை Click செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு http://jipmer.puducherry.gov.in/ என்ற இணையப்பக்கதினை பார்வையிடவும்.