இலவச மிக்சி கிரைண்டருடன் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி சர்கார் படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது இத்திரைப்படம். இதில், விஜயுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த நடிகர் பேனர்களை கிழித்தனர். இதனால் சில இடங்களில் கட்சிகள் ரத்து செய்யப்பட்டது.


சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது. 


இந்நிலையில் விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் படத்தின் வெற்றியை விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். அந்த கேக்கில் மிக்சி, கிரைண்டர் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கேக்கின் புகைப்படம் தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.