சஷ்டி நாளான இன்று, விரதம் இருந்து குமரனை வேண்டுவோம். நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் கந்தவேலன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் இன்று சஷ்டி தினம். இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை நினைத்து பூஜியுங்கள். கந்தசஷ்டி கவசம் முதலானவை பாராயணம் செய்து வழிபடுங்கள். இன்று சஷ்டி விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.


இன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும்.