ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்பது நிதிச் சேவைகளுக்கான ஒரு சட்டப்பூர்வ அமைப்பு மற்றும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு பொதுத்துறை வங்கியாகும்.  2020 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் உள்ள ஒரே இந்திய வங்கி, இந்த எஸ்பிஐ வங்கி தான்.  மேலும் இது உலகின் 43 வது பெரிய வங்கியாகும் மற்றும் 221 வது மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியத்தில் அரசு வேலை!


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது பாதுகாப்பு வங்கி ஆலோசகர்-கடற்படை, ஆலோசகர்-மத்திய ஆயுதக் காவல் படைகள், வட்ட ஆலோசகர்-மத்திய ஆயுதக் காவல் படைகள், வட்ட பாதுகாப்பு வங்கி ஆலோசகர், ஆராய்ச்சி ஆய்வாளர், ஆராய்ச்சி ஆய்வாளர்-ஈக்விட்டி, ஆராய்ச்சி ஆய்வாளர் போன்று காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  மொத்தமாக இந்தப் பணியிடங்களுக்கு 11 இடங்கள் காலியாக உள்ளன, தற்போது நிறுவனம் தகுதியான நபர்கள் பணியமர்த்த உள்ளது.


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 13, 2022 ஆகும்.  ஒரு பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர் குறிப்பிட்ட தேதியில் அந்த பதவிக்கான தகுதி மற்றும் பிற விதிமுறைகளை பூர்த்தி செய்துள்ளார் என்பதையும், அவர் வழங்கிய விவரங்கள் எல்லா வகையிலும் சரியானவை என்பதையும் நிச்சயம் உறுதி செய்ய வேண்டும்.



அனைத்து பதவிகளும் ஒப்பந்த அடிப்படையில் இருக்கும் மற்றும் புது டெல்லி, போபால், கொல்கத்தா, புனே, லக்னோ & மும்பை போன்ற பகுதிகளில் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.  மேலும் விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்கிற இணைப்பின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.  இணைய வங்கி / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.


மேலும் படிக்க | SSC Recruitment 2022: இளைஞர்களுக்கு நல்ல செய்தி: அக்டோபருக்கும் 42000 பேருக்கு அரசுப்பணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR