புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் ட்வீட்கள் போன்ற பல்வேறு தொடர்பு முறைகள் மூலம் ஃபிஷிங் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கெஒய்சி மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வைப் பரப்பும் வகையில், வங்கி குறிப்பிட்ட இரண்டு எண்களைப் பகிர்ந்துள்ளது. இந்த எண்கள் உட்பட சந்தேகத்திற்குரிய அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று வங்கி வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த எண்கள் சில இணைப்புகளை கிளிக் செய்ய கேட்பதாகவும், அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் தற்போது பரவி வரும்  கெஒய்சி மோசடிகள் குறித்தும் வங்கி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. 


“இந்த எண்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும் KYC புதுப்பிப்புகளுக்கான ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில் அவை எஸ்பிஐ உடன் தொடர்புடையவை அல்ல. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு +91-8294710946 & +91-7362951973 ஆகிய இரண்டு எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. 


கெஒய்சி புதுப்பிப்புக்காக சில இணைப்புகளை கிளிக் செய்யுமாறு கேட்கப்படுகின்றன. இவை ஃபிஷிங் இணைப்புகள், இவற்றை கிளிக் செய்ய வேண்டாம். எந்த ஒரு ஃபிஷிங்/சந்தேகத்திற்குரிய இணைப்பையும் எப்போதும் கிளிக் செய்ய வேண்டாம் என்று அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து ட்வீட் செய்தது.


மேலும் படிக்க | தினமும் ரூ7 சேமித்தால் ரூ60000 ஓய்வூதியம் பெறலாம்! முதலீடு செய்வது எப்படி 


கோவிட்-19 நோய்த்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து நாட்டில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. மொபைல் வாலட்கள், யுபிஐ போன்றவற்றின் மூலம் அதிக அளவு டிஜிட்டல் பண பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் மற்றும் மொபைல் வங்கி சேவைகளுக்கான பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இவை ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பதற்கு ஒரு மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளன. 


எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிகளில் ஆன்லைன் மோசடி தொடர்பான விழிப்புணர்வு மின்னஞ்சல்களைப் பெறுகின்றனர். "ஒரு வாடிக்கையாளர் ஃபிஷிங் மின்னஞ்சலைப் பெற்றால், அவர்கள் அத்தகைய விஷயங்களை பற்றி report.phishing@sbi.co.in -க்கு மின்னஞ்சல் அனுப்பி வங்கிக்கு தெரிவிக்கலாம்" என்று வங்கி ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | ஏப்ரல் 20-ல் 420 உருவானதன் சுவாரஸ்ய பின்னணி



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR