தினமும் ரூ7 சேமித்தால் ரூ60000 ஓய்வூதியம் பெறலாம்! முதலீடு செய்வது எப்படி

மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இதுவரை நான்கு கோடி மக்கள் இணைந்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Apr 22, 2022, 10:23 AM IST
  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டம் உள்ளது.
  • மத்திய அரசு நேஷனல் பென்ஷன் ஸ்கீம் மூலம் நிர்வகிக்கிறது.
  • 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
தினமும் ரூ7 சேமித்தால் ரூ60000 ஓய்வூதியம் பெறலாம்! முதலீடு செய்வது எப்படி title=

அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்களது வருங்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் பணியாளர் வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதியன்று மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  இதுவரை இந்த திட்டத்தில் நான்கு கோடி மக்கள் இணைந்துள்ளனர்.  இதனை மத்திய அரசு நேஷனல் பென்ஷன் ஸ்கீம் மூலம் நிர்வகிக்கிறது, இது வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

மேலும் படிக்க | ஏப்ரல் 20-ல் 420 உருவானதன் சுவாரஸ்ய பின்னணி

 

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும், இதில் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.  இந்த திட்டத்தில் இணைத்துள்ள நபர்கள் அவர்களது 60 வயதின்போது இந்த திட்டத்தின் முழுமையான பலனையும் அனுபவிக்க முடியும்.  மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் இறந்துபோகும் வரை ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம், அவர்கள் இறந்த பிறகு அவரது மனைவி இறந்துபோகும் வரை அந்த ஓய்வூதிய தொகையை பெற்றுக்கொள்ளலாம்.  மேலும் முதலீடு செய்தவரும் அவரது கணவனோ அல்லது மனைவியோ யாரேனும் இறந்துவிட்டால் அந்த ஓய்வூதிய பணத்தை நாமினியாக யார் இருக்கிறாரோ அவர் பெற்றுக்கொள்ளலாம்.

18 வயது பூர்த்தியான ஒருவர் இந்த திட்டத்தில் முதலீடு செய்த பின்னர் 42 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.210ஐ சந்தாவாக செலுத்த வேண்டும்.  இதன்மூலம் அந்நபர் ஓய்வு பெற்றபின் அதாவது 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ரூ.5000ஐ பென்ஷனாக பெற முடியும்.  இந்த திட்டத்தில் சேர்ந்த அனைவரும் ஓய்வூதயம் பெறுவதற்கு தவறாமல் மாதந்தோறும் பிரீமியம் தொகை ரூ.210ஐ செலுத்த வேண்டும்.  

இதனை செய்ய முதலில் நீங்கள் அடல் பென்ஷன் யோஜனாவின் அதிகாரபூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும், https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html.  அதைத்தொடர்ந்து உங்கள் சுயவிவர மற்றும் ஆதார் விவரங்களை பதிவிட வேண்டும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை கொண்டு தகவல்களை சரிப்பார்க்கலாம்.  பின்னர் வங்கியின் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி எண்ணை பதிவிட வேண்டும், வங்கி கணக்கு விவரங்கள் முடிந்ததும் நாமினியாக யாரை நியமிக்க விரும்புகிறீர்களோ அவர்களை பற்றிய விவரங்களை பதிவிட்டபின் நீங்கள் செலுத்த விரும்பும் பிரீமியம் தொகையை தேர்ந்தெடுக்கவும்.  பின்னர் இ-சைன் செய்ததும் உங்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நிறைவடையும்.

மேலும் படிக்க | Bank Locker: விதிகளில் மாற்றம், தெரிந்துகொள்வது அவசியம்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News