SBI Latest News: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கியில் வழங்கப்படும் வசதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறது. இதனுடன், பல வித மோசடிகள் மற்றும் இணைய பரிமாற்ற பிரச்சனைகள் பற்றியும் வங்கி தொடர்ந்து எச்சரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ (SBI) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வங்கியின் சேவைகளைப் பற்றி தொடர்ந்து தெரிவித்து வருகிறது. வெளிநாட்டில் உள்ள உங்கள் உறவினர்கள் அல்லது அன்புக்குரியவர்களுக்கு பணம் அனுப்புவதற்கான எளிதான செயல்முறை குறித்த தகவல்களை இப்போது வங்கி வழங்கியுள்ளது. அதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.


SBI இன் FXOUT இயங்குதளம்


வங்கியின் இந்த FXout தளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளுக்கு எளிதாகவும் வேகமாகவும் பணத்தை அனுப்ப முடியும் என்று SBI தனது ட்வீட்டில் கூறியுள்ளது. இதன் மூலம் சுமார் 91 கரன்சிகளில் பணம் அனுப்பும் செயல்முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.


எஸ்பிஐயின் அனைத்து கிளைகளிலிருந்தும் பணத்தை அனுப்பலாம்


அமெரிக்க டாலர், ஆஸ்திரேலிய டாலர், சிங்கப்பூர் டாலர், கனேடிய டாலர், யூரோ மற்றும் பவுண்ட் ஆகியவற்றைத் தவிர, 91 கரன்சிகளில், அனைத்து SBI கிளைகளிலிருந்தும் நீங்கள் பணத்தைப் பரிமாற்றலாம். மேலும் இந்த வசதி www.onlinesbi.com மூலம் சில்லறை இணைய வங்கி பயனர்களுக்கும் கிடைக்கிறது.


ALSO READ: Home Loan Interest: குறைந்த வட்டி; வீட்டு கடனில் கலக்கும் பிரபல வங்கிகள் 


25,000 டாலர் வரை துரிதமாக அனுப்பலாம்


இந்த வழியில், நீங்கள் 25,000 டாலர், அதாவது சுமார் ரூ.18 லட்சம் வரை விரைவாக எளிதில் அனுப்பலாம். இந்த வசதியை 214 நாடுகளுக்குப் பெற முடியும் மற்றும் இந்த சேவை வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு (SBI Customers) 24X7 கிடைக்கும்.


இந்த விஷாயங்களை நினைவில் கொள்ளுங்கள்


Fxout தளத்தின் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்த, வங்கியில் (Banks) வாடிக்கையாளரின் கணக்கின் KYC இருப்பது அவசியமாகும்.


பயனாளியைப் பற்றிய தகவலையும் பெற வாடிக்கையாளர்கள் வங்கியின் கிளைக்கு செல்லலாம்.


இதைப் பற்றிய கூடுதல் தகவலைப் பெற, fxout.gmuk@sbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் மின்னஞ்சல் அனுப்பி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.


ALSO READ:SBI Alert: இனி பரிவர்த்தனைகளுக்கு அதிக தொகை செலுத்த வேண்டும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR