SBI Alert: இனி பரிவர்த்தனைகளுக்கு அதிக தொகை செலுத்த வேண்டும்

டிசம்பர் 1 முதல், அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும், அமேசான் - பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் எஸ்பிஐயின் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2021, 02:40 PM IST
  • SBI Cards அனைத்து EMI தவணை பரிவர்த்தனைகளுக்கும் செயலாக்க கட்டணம் மற்றும் வரி விதிக்கும்.
  • விலை உயர்ந்ததாகிறது Buy Now Pay Late வசதி.
  • கிரெடிட் கார்டுகளுடன் EMI பரிவர்த்தனைகள் செய்வது இப்போது விலை உயர்ந்ததாகிவிடும்.
SBI Alert: இனி பரிவர்த்தனைகளுக்கு அதிக தொகை செலுத்த வேண்டும் title=

SBI Credit Card Alert:  டிசம்பர் 1 முதல், அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும், அமேசான் - பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் எஸ்பிஐயின் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

எஸ்பிஐ கார்ட்ஸ் & பேமென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (SBICPSL), கார்ட் வைத்திருப்பவர்கள், இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு, இப்போது செயலாக்கக் கட்டணமாக ரூ.99 மற்றும் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. SBI Cards டிசம்பர் 1, 2021 முதல் புதிய விதியை அமல்படுத்த உள்ளது. SBI Cards அனைத்து EMI தவணை பரிவர்த்தனைகளுக்கும் செயலாக்க கட்டணம் மற்றும் வரி விதிக்கும்.

SBI Cards மின்னஞ்சல் மூலம் தகவலை தெரிவித்தது

SBI Cards கிரெடிட் கார்டு வைத்திருக்கு அனைவருக்கும் நவம்பர் 12 ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் இந்த தகவலை அளித்துள்ளது. SBI Cards மின்னஞ்சலில் "அன்புள்ள கார்டுதாரர்களே, டிசம்பர் 01, 2021 முதல் வணிகர் அவுட்லெட் / இணையதளம் / செயலிகளில் செய்யப்படும் அனைத்து EMI பரிவர்த்தனைகளுக்கும் 99 ரூபாய் செயலாக்கக் கட்டணம் விதிக்கப்படும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். அதற்கு வரியும் வசூலிக்கப்படும். உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி. வணிகர் EMI செயலாக்கக் கட்டணங்களைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்," என்று தெரிவித்துள்ளது. இந்த மின்னஞ்சல் அனைத்து SBI கிரெடிட் கார்டுதாரர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ALSO READ:எஸ்.பி.ஐ அசத்தல் திட்டம்: கிடைக்கும் இரட்டை நன்மை 

Zero Interest Plan-னிலும் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும்

ஆனால், டிசம்பர் 1-ம் தேதி முதல், அப்படி வாங்கும் சந்தர்ப்பங்களில், எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் 99 ரூபாய் செயலாக்கக் கட்டணத்துடன் வரியும் செலுத்த வேண்டும். EMI பரிவர்த்தனைகளாக மாற்றப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே செயலாக்கக் கட்டணம் ரூ.99 வசூலிக்கப்படும். EMI-யை Pre-Closure செய்தால், செயலாக்கக் கட்டணம் திரும்பப் பெறப்படாது.

புதிய விதி உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

எஸ்பிஐ கார்டுகளுடன் ஈஎம்ஐ பரிவர்த்தனை மூலம் ஈ-காமர்ஸ் இணையதளத்தில் மொபைல் போனை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது SBI Cards உங்களிடம் கூடுதல் செயலாக்கக் கட்டணமாக ரூ.99 மற்றும் அதற்கு வரியை (Interest) விதிக்கும். இந்த கூடுதல் தொகை உங்கள் கிரெடிட் கார்டின் மாதாந்திர அறிக்கையில் EMI தொகையுடன் பிரதிபலிக்கும்.

விலை உயர்ந்ததாகிறது Buy Now Pay Late திட்டம்

நிபுணர்களின் கூற்றுப்படி, SBI கார்டுகளின் இந்த புதிய விதி, இப்போது Buy Now Pay Later போன்ற திட்டங்களை பாதிக்கும்.  ஏனெனில் கிரெடிட் கார்டுகளுடன் EMI பரிவர்த்தனைகள் செய்வது இப்போது விலை உயர்ந்ததாகிவிடும்.

ALSO READ:SBI Offer: இந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ரூ. 2 லட்சம் வரையிலான இலவச நன்மை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News