SBI Door Step Banking: இனி உங்கள் வீடு தேடி பணம் வரும்..!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்காக வீட்டு வாசலில் வங்கி சேவைகளை வழங்க தொடங்கியுள்ளது.
SBI Door Step Banking: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் (PSB and Private Banks) தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் இருந்த படியே பெறும் பல சேவைகளை வழங்குகின்றன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்காக வீட்டு வாசலில் வங்கி சேவைகளை வழங்க தொடங்கியுள்ளது.
இதன் கீழ், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பது முதல், காசோலை பெறுதல், பணம் டெபாஸிட் செய்தல் உள்ளிட்ட பல வசதிகளை வீட்டில் இருந்த படியே பெறலாம். எனினும் ஒரு நாளில் நீங்கள் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆர்டர் செய்யலாம் என வங்கி தெரிவித்துள்ளது.
ALSO READ | SBI வழங்கும் கொரோனா கடன்; குறைந்த வட்டியில் ₹5 லட்சம்; விண்ணபிப்பது எப்படி..!!
வங்கி சேவை இப்போது உங்கள் வீட்டு வாசலில் கிடைக்கும் என்று கூறியுள்ள ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா, இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் கிளையில் பதிவு செய்யலாம். வங்கி வழங்கும் வீட்டி சேவையின் கீழ் பணத்தை டெபாசிட் செய்வதற்கும், கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கும் அதிகபட்ச வரம்பு ஒரு நாளைக்கு ரூ.20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்திவைப்பு!
அனைத்து நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்கள் 60 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி என்ற அளவில் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும். அதே நேரத்தில், நிதி பரிவர்த்தனைகளுக்கு, வங்கி சேவை கட்டணமாக ரூ .100 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். பணத்தை எடுக்க, காசோலையுடன், கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான படிவம் மற்றும் பாஸ்புக் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
எனினும் எஸ்பிஐயின் புதிய டோர் ஸ்டெப் வங்கி சேவையில், தனிநபர் அல்லாத மற்றும் சாதாரண கணக்குகளுக்கு கிடைக்காது. மறுபுறம், வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட முகவரி வீட்டு கிளையிலிருந்து 5 கிமீ சுற்றளவுக்குள் இருந்தால், இந்த வசதி கிடைக்காது. டோர் ஸ்டெப் பாங்கிங் (Door Step Banking) சேவையில் நிதி பரிவர்த்தனை மற்றும் நிதி பரிவர்த்தனை அல்லாத சேவைகளுக்கு 75 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
டோர் ஸ்டெப் பாங்கிங் (Door Step Banking) சேவை பெற மொபைல் செயலி, இணையதளம் அல்லது கால் சென்டர் மூலம் பதிவு செய்யலாம். அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800111103 ஐ அழைப்பதன் மூலமும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் https://bank.sbi/dsb ஐ கிளிக் செய்யலாம்.
ALSO READ | 7th Pay Commission மிகப்பெரிய முடிவு: இவர்களின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR