ஒரே தவணையில் டெபாசிட் செய்யத் தேவையான தொகை ரூ.500. ஒரு நிதியாண்டில், SBI பிளக்ஸி வைப்புத் திட்டத்தில் தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.5,000 ஆகும்...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், SBI-யின் பிளக்ஸி டெபாசிட் (Flexi Deposit) கணக்கு மூலம் பயனர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. SBI சேமிப்புக் கணக்கு மற்றும் பிளக்ஸி டெபாசிட் (Flexi Deposit) இரண்டிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். சேமிப்பு கணக்கில் இருப்பு குறையும் போது பிளக்ஸி டெபாசிட்டிலிருந்து சேமிப்புக் கணக்கிற்கு தானாகவே பணம் வரவு வைக்கப்படும். SBI வழங்கும் பிளக்ஸி டெபாசிட் கணக்கு குறித்து இங்கே பார்ப்போம், SBI வலைத்தளத்தின் தகவல் படி, ஒரே தவணையில் டெபாசிட் செய்யத் தேவையான தொகை ரூ.500. ஒரு நிதியாண்டில், SBI பிளக்ஸி வைப்புத் திட்டத்தில் தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.5,000 ஆகும். 


இருப்பினும், SBI பிளக்ஸி திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வைப்பு ஒரு நிதியாண்டில் ₹.50,000 ஆகும். SBI-யை போல பல்வேறு வங்கிகளும் பிளக்ஸி டெபாசிட் திட்டத்தை வழங்கி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு வங்கிகளும் சில தனிப்பட்ட விதிமுறைகளை வைத்துள்ளன. பிளக்ஸி டெபாசிட் கணக்கை எளிதாக தொடங்கிவிடலாம் என்பதும், தேவைப்படும் போது பணத்தை வெளியே எடுத்துவிடலாம் என்பதும் இந்த கணக்கில் உள்ள வசதி.
இதற்கான அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை.


ALSO READ | SBI Big Alert: SBI வாடிக்கையாளர்கள் இன்று நெட் பேங்கிங் சேவையை பயன்படுத்த முடியாது..!!


இதற்கான அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. SBI வழங்கும் பிளக்ஸி டெபாசிட் கணக்கு குறித்து இங்கே பார்ப்போம், SBI வலைத்தளத்தின்படி, ஒரே தவணையில் டெபாசிட் செய்யத் தேவையான தொகை ரூ.500. ஒரு நிதியாண்டில், SBI பிளக்ஸி வைப்புத் திட்டத்தில் தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.5,000 ஆகும். எனினும். SBI பிளக்ஸி திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வைப்பு ஒரு நிதியாண்டில் ₹.50,000 ஆகும்.


SBI பிளக்ஸி வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச வைப்பு காலம் 5 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் ஆகும். SBI தற்போது ஒரு ஆண்டு மற்றும் ஏழு ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்த நிலையான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 6.25% வட்டி விகிதத்தை செலுத்துகிறது.