SBI FD Interest Rates: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தியாக இருக்கும். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, தனது 40 கோடி வாடிக்கையாளர்களுக்கு அருமையான பரிசை வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரத ஸ்டேட் வங்கி (SBI) , 7 முதல் 45 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை 2.90 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனுடன் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதமும் 3.40 சதவீதத்தில் இருந்து 3.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


FD-களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துகிறது SBI


எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டின் முதல் பரிசை வழங்கியுள்ளது. இதன் கீழ், எஸ்பிஐ 7 முதல் 45 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை 2.90 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனுடன் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதமும் 3.40 சதவீதத்தில் இருந்து 3.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


180-210 நாட்கள் வரையிலான FD-களுக்கான (Fixed Deposit) வட்டி விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 3.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3.50 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


ALSO READ | Fixed Deposit-க்கு மிக அதிக வட்டி அளிக்கும் டாப் வங்கிகள் இவைதான் 


1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கான வட்டி விகிதத்தை 4.90 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வங்கி உயர்த்தியுள்ளது. அதே சமயம் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


எஸ்பிஐ 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கான வட்டி விகிதங்களை (Interest Rate) 5.10 இல் அப்படியே வைத்திருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 5.60 சதவீதமாகவே உள்ளது. மற்ற வட்டி விகிதங்களும் வங்கியால் நிலையாக வைக்கப்பட்டுள்ளன.


வங்கி அடிப்படை விகிதத்தை (Base Rate) உயர்த்தியது


இதற்கு முன் அடிப்படை விகிதத்தையும் வங்கி மாற்றியுள்ளது. அடிப்படை விகிதத்தை அதிகரிப்பதன் விளைவு வட்டி விகிதங்களில் காணப்படும். அடிப்படை விகிதத்தை அதிகரித்தால், வட்டி விகிதங்கள் முன்பை விட அதிகமாகும். இதன் காரணமாக கடன் வாங்கியவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். 


அடிப்படை விகிதத்தை தீர்மானிக்கும் உரிமை வங்கிகளின் கைகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த தனியார் அல்லது அரசு வங்கியும் அடிப்படை விகிதத்திற்குக் கீழே கடன் வழங்க முடியாது. அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் அடிப்படை விகிதத்தை நிலையான ஒன்றாக கருதுகின்றன. இதன் அடிப்படையில் கடனுக்கான வட்டி போன்றவை தீர்மானிக்கப்படுகின்றன. 


ALSO READ | நீங்கள் SBI வாடிக்கையாளரா? உங்களுக்கான முக்கியமான செய்தி இது 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR