SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: ATM விதிகளில் மாற்றம்
புதிய விதியில், OTP அடிப்படையில் மட்டுமே வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியும்.
SBI New Rule: SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. இந்த புதிய விதியில், OTP அடிப்படையில் மட்டுமே வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் பணம் எடுக்க முடியும். இதன் கீழ், பணம் எடுக்க, வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் மொபைல் போனில் OTP-ஐப் பெறுவார்கள். இதை உள்ளிட்ட பின்னரே அவர்களால் பணத்தை எடுக்க முடியும்.
இந்த தகவலை வங்கி ட்வீட் செய்துள்ளது
இந்த தகவலை வங்கி ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்டில், 'எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்களது OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறை மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும். மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். OTP அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் முறை எவ்வாறு செயல்படும் என்பதை SBI வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளது.
ரூ.10,000 மற்றும் அதற்கு மேலான தொகையை எடுப்பவர்களுக்கு இந்த விதிகள் இருக்கும்
ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்போருக்கு இந்த விதிகள் பொருந்தும். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், தங்கள் ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு முறையும் ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் பணத்தை எடுக்க, வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைலில் அனுப்பப்படும் OTP மற்றும் அவர்களின் டெபிட் கார்டின் பின் ஆகியவற்றை உள்ளிட வேண்டியிருக்கும். அதன் பிறகே பணம் எடுப்பதற்கான அனுமதி கிடைக்கும்.
ALSO READ: UBI அளித்த குட் நியூஸ்: வீட்டுக்கடன் விகிதங்கள் குறைக்கப்பட்டன
முழு செயல்முறையை இங்கே தெரிந்து கொள்ளலாம்:
- எஸ்பிஐ ஏடிஎம்மில் (ATM) பணம் எடுக்க OTP தேவைப்படும்.
- இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- இந்த OTP ஆனது நான்கு இலக்க எண்ணாக இருக்கும். அதை வாடிக்கையாளர் ஒரு முறை பரிவர்த்தனைக்கு பெறுவார்.
- நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டதும், ஏடிஎம் திரையில் OTP ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
- வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ பணம் எடுப்பதற்கு முன் இந்தத் திரையில் உள்ளிட வேண்டும்.
இதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது?
வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் வங்கியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இடம், இந்தியாவில் 71,705 பிசி அவுட்லெட்டுகளுடன் 22,224 கிளைகள் மற்றும் 63,906 ATM/CDM ஆகியவற்றுக்கான மிகப்பெரிய நெட்வர்க் உள்ளது. இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தோராயமாக 9.1 கோடி மற்றும் 2 கோடியாகும்.
ALSO READ: SBI Mega E-Auction: மிகக்குறைந்த விலையில் வீடு, மனை வாங்க சூப்பர் வாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR