எஸ்பிஐ வங்கியானது ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  எஸ்பிஐ ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.   22.06.2022ம் தேதிக்கு பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இந்து சமய அறநிலையத் துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு!


இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ஒரு வருடம் மற்றும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வங்கியில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது 65 வயதை எட்டியவராக இருக்க வேண்டும்.  விண்ணப்பதாரர் 31.05.2019 அன்று அல்லது அதற்குப் பிறகு SMGS-IV & V தரங்களில் அதிகாரியாக பணிபுரிந்து வங்கியின் சேவையில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.  பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு தானாக முன்வந்து ஓய்வு பெற்ற/ ராஜினாமா செய்த/ இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது வங்கியை விட்டு வெளியேறிய அதிகாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள்.



குறைந்தபட்சம் ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், அட்வான்ஸஸ் / அதிக மதிப்புக் கடன்/ அந்நிய செலாவணி/ விவசாயம்/ ஐடி போன்ற பணி சார்ந்த நிறுவனங்களின் பணிபுரிந்திருக்க வேண்டும்.  சில விதிகளின் அடிப்படியில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், விண்ணப்பத்தை அனுப்புவதால் மட்டுமே விண்ணப்பதாரர் தகுதி பெறமாட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | 10ஆவது படித்தவர்களுக்கு 14,000 சம்பளத்தில் அரசு வேலை - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR