SBI Kavach Personal Loan: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மிக  எளிய வகையில், நிபந்தனை ஏதும் இல்லாமல் வழங்கப்படும்  தனிநபர் கடன் எல்பிஐ கவச் பர்சனல் லோன் (SBI Kavach Personal Loan)  என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு வகை கடனில், வங்கி தனது வாடிக்கையாளர் மற்றும் வாடிக்கையாளரின் குடும்ப உறுப்பினர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவுகளை சமாளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. கவச் தனிநபர் கடனின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் செலவுகளிலிருந்து நிவாரணம் வழங்குவதாகும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் கடனின் கீழ், வாடிக்கையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சிகிச்சைக்கான முழுச் செலவையும் வங்கி  செலுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டத்தில் பயனடையும் நபர்கள்


எஸ்பிஐ -யின் இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், கடன் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் எந்தவிதமான சொத்த்தின் ஆவணங்களையும்  டெபாசிட் செய்ய வேண்டியத் தேவையில்லை. இதன் கீழ், ஐந்து ஆண்டுகள் வரை ஐந்து லட்சம் கடன் வழங்கப்படும். அதே நேரத்தில், குறைந்தபட்ச கடன் 25 ஆயிரம் வரை எடுக்கலாம். அதன் வட்டி விகிதம் 8.5%ஆக இருக்கும்.


ALSO READ: WHO: இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை


யார் கடன் பெற முடியும்?


இந்த கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும்  நன்மை பயக்கக் கூடியது, ஏனெனில் கடன் வாங்கி மூன்று மாதங்கள் கடன் காலம் முடிந்த பிறகும் மேலும் மூன்று மாதங்களுக்குகடனுக்கான இஎம்ஐ  செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும். வட்டி விகிதமும் மிகவும் குறைவாக உள்ளது. எஸ்பிஐ இந்த கடன் திட்டத்தை, 2021, ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கியது. இந்த கடனின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், எந்த விதமன சம்பளமும் கிடைக்காதவர்களும், இந்த திட்டத்தின் நன்மையைப் பெறுவார்கள், அவர்களுக்கு எந்தவிதமான சம்பளமும் கிடைக்காது.


விண்ணப்பிக்கும் முறை


ஓய்வூதியதாரர்களும் இந்த கடன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் கோவிட் -19  தொடர்பாக,  கடன் வாங்குவதற்கு  முன் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் செலவுகளையும் சேர்க்க வங்கி முடிவு செய்துள்ளது. அந்தச் செலவுகளை வங்கி திருப்பிச் செலுத்தும். கவச் தனிநபர் கடன் பெற எஸ்பிஐயின் ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பம் செய்யலாம்.


ALSO READ | COVID-19 Update: கடந்த 24 மணி நேரத்தில் 34,457 புதிய தொற்று பாதிப்பு; 375 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR