மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்றபிறகு நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள். தங்கள் முதலீடு வழக்கமான வருமானத்தை வழங்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வங்கியின் நிலையான வைப்புத்தொகைகள் (FD) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அவர்களுக்கு ஏற்ற முதலீட்டு ஆப்ஷன்களாகும். அவை நீண்டகால காரணிகளாக மற்ற கூடுதல் நன்மைகளுடன் பாதுகாப்பை வழங்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில், நாட்டின் சிறந்த கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மூத்த குடிமக்களுக்கான SBI 'WECARE' மூத்த குடிமக்கள் கால வைப்புத் திட்டத்தை நீட்டிப்பதாக அறிவித்தது.


SBI மூத்த குடிமக்கள் சிறப்பு எஃப்.டி மற்றும் தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் ஒப்பீடு:


வட்டி விகிதம்


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டியை வழங்குகிறது. இது இந்தியாவின் பல்வேறு சிறிய சேமிப்பு திட்டங்களில் மிக உயர்ந்த வட்டி வீதமாகும்.


ஒரு மூத்த குடிமகன் இந்த சிறப்பு FD திட்டத்தின் கீழ் ஃபிக்சட் டெபாசிட் செய்தால், அந்த FD-க்கான வட்டி விகிதம் 6.20% ஆக இருக்கும். இந்த கூடுதல் வட்டி அதாவது, 30 bps, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் கிடைக்கிறது.


கால அளவு


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) என்பது 60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் அரசாங்க ஆதரவு சேமிப்பு அம்சமாகும். கணக்கு திறக்கப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு வைப்பு முதிர்ச்சியடைகிறது. ஆனால் கூடுதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நீட்டிக்கப்படலாம்.


SBI மூத்த குடிமகக்கள் சிறப்பு FD மீதான வட்டி விகிதம், 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட கால அளவுகளைக் கொண்ட மூத்த குடிமக்களின் (Senior Citizens) சில்லறை கால வைப்புத்தொகைகளுக்கு மட்டுமே செலுத்தப்படும்.


பயன்பாடு


மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்.டி திட்டமான SBI Wecare Deposit, மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சில்லறை கால வைப்பு பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2021 மார்ச் 31 வரை பொருந்தும்.


தகுதி


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் SBI சிறப்பு எஃப்.டி திட்டத்தை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் திறக்கலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் பொது, தனியார் துறை வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்கள் மூலம் கிடைக்கிறது. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்புக் கருவியாக இருப்பதால், நீங்கள் தபால் அலுவலகம் (Post Office), வங்கி என எங்கு முதலீடு செய்தாலும், SCSS க்கு பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஒன்றாகவே இருக்கும்.


ALSO READ: Air India டிக்கெட்டுகளில் 50% தள்ளுபடி: யாருக்கெல்லாம் கிடைக்கும்?


SBI கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் மட்டுமே SBI Wecare Deposit திட்டத்தின் நலன்களைப் பெற முடியும்.


Premature Withdrawal (முன்கூட்டியே பணம் எடுப்பது)


மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டத்தில் முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு அபராதம் இருக்கும். SCSS இலிருந்து முன்கூட்டியே வெளியேறுவதற்கான அபராதங்கள் பின்வருமாறு:


கணக்கு திறக்கப்பட்ட தேதியிலிருந்து 2 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பாக திட்டத்திலிருந்து வெளியேறினால் அபராதமாக 1.5% வைப்புத் தொகை கழிக்கப்படுகிறது.


ALSO READ: DakPay: ‘டிஜிட்டல்’ பணப்பரிவர்தனைக்கு மாறிய இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி!


கணக்கு திறக்கப்பட்ட தேதியிலிருந்து 2 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான கால இடைவெளியில் திட்டத்திலிருந்து வெளியேறினால் 1% எஸ்சிஎஸ்எஸ் வைப்புத்தொகை அபராதமாகக் கழிக்கப்படுகிறது.


மூத்த குடிமக்களுக்கான SBI சிறப்பு FD திட்டத்திலிருந்தும் முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. எனுனும் இதற்கும் அபராதம் உண்டு. முன்கூட்டியே தொகையை திரும்பப் பெறும்போது செலுத்தப்படாத 30 பிபிஎஸ் கூடுதல் பிரீமியம் மற்றும் 0.5% அபராதமாக விதிக்கப்படும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR