SeePics: விமான சேவையை மிஞ்சும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை!
இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ், லக்னோ - புதுடில்லி இடையே இயக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரயிலில் பயணம் செய்பவர் புதியதொரு அனுபவத்தை பெறுவர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ், லக்னோ - புதுடில்லி இடையே இயக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரயிலில் பயணம் செய்பவர் புதியதொரு அனுபவத்தை பெறுவர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம், தேஜஸ் எக்ஸ்பிரஸினை, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். முதல் நாளில் இந்த ரயிலில் 389 பயணிகள் பயணித்தனர். அக்டாபர் 4 காலை 6.10 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், நண்பகல் 12.25 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தது. மறுமார்க்கத்தில், டெல்லியில் மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு லக்னோவை வந்து அடைந்தது.
அதேப்போல் இன்று அக்டோபர் 5-ஆம் நாள் முதல் வழக்கமாக டெல்லியில் இருந்து இயக்கப்பட உள்ளது. லக்னோவில் இருந்து நாளை முதல் இயக்கப்படும். செவ்வாய் தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும். கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும். லக்னோவில் இருந்து டெல்லிக்கு 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவிக்கையில்., "சமீபத்திய மற்றும் உலகத் தரம் வாய்ந்த 'தேஜாஸ் எக்ஸ்பிரஸ்' லக்னோவுக்கு இடையில் டெல்லிக்கு பயணத்தைத் தொடங்கியுள்ளது.
25 லட்சம் இலவச காப்பீடு, தாமதத்திற்கு இழப்பீடு, போர்டு ஊழியர்கள், உணவு, சிற்றுண்டி மற்றும் விமான பயண அனுபவம் ஆகியவற்றுடன், இந்த ரயில் நாட்டில் பயணம் செய்யும் அனுபவத்தை மாற்றும்." என குறிப்பிட்டுள்ளார்.