மலேசியா; பெண்களின் திருமண வயதினை 16-லிருந்து 18-ஆக உயர்த்த சிலாங்கூர் சுல்தான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலேசியாவின் சிலாங்கூர் என்னும் மாகானத்தில், சமீப காலமாக நடைப்பெற்று வந்த திருமணங்களின் மூலம் அந்நாட்டில் இளம் வயது இஸ்லாமிய பெண்கள் பெரும் துயரத்தை அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக சிலாங்கூர் சுல்தான் சராப்புதீன் இட்ரிஸ் ஷா., பெண்களின் அதிகாரப்பூர்வ திருமண வயதினை 16-லிருந்து 18-ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக 14 வது சிலாங்கூர் சட்டமன்ற கூட்டதொடரில் அறிவித்துள்ளார்.


முன்னதாக கேலநத்தன் பகுதியில் 41 வயது ஆணுக்கும் 11-வயது சிறுமிக்கும் நிகழ்ந்த பாலிய திருமணத்தினை சுட்டிக்காட்டிய அவர், சிலாங்கூரில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இதுபோன்ற பாலிய திருமணங்களை நடத்துவோரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாகவே பெண்களின் திருமண வயதினை சட்டரீதியாக அங்கிகரிக்கும் சட்டதிருத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


சிலாங்கூர் இஸ்லாமிய மதக் குழு (Mais) மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய மதத் திணைக்களம் (Jais), இச்சட்ட திருத்தத்திற்கு தேவையான மாற்றங்களை முன்வைப்பதற்காகவும், தற்போதைய இஸ்லாமிய சட்டங்களைக் கவனிப்பதாகவும் சுல்தான்  தெரிவித்துள்ளார்.