சக பயணிகளின் முன்னிலையில் தாறுமாறாக போட்டோ-ஷூட் செய்த பெண்ணின் வீடியோ வைரளாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்மில் சிலருக்கு எங்கு சென்றாலும் புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருப்பது வழக்கம். அதிலும் சிலர், புகைப்படம் எடுத்துக்கொல்வதையே முழுநேர வேலையாகவும் செய்து வருகின்றனர். அது மட்டும் இன்றி அதை இணையதளத்தில் பதிவிட்டுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி புகைப்படம் மீது அதீத ஈர்புடையவர்கள் இடம், பொருள், நேரம் என்று எதை பற்றியும் கவலைப்படுவது இல்லை. இப்படி ஒரு பெண் ரயிலில் தாறுமாறாக புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் விரலாக பரவி வருகிறது. 


நியூயார்க்கைச் சேர்ந்த ஜெசிக்கா ஜார்ஜ் என்னும் பெண் நியூயார்க்கின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். திடீரென்று எழுந்த அவர், ‘செல்ஃப் டைமர்' வைத்து தொலைபேசியில் செல்ஃபி எடுக்க ஆரம்பித்துள்ளார். இதைப் பார்த்த சக பயணியான பென் யார் என்பவர் ஜெசிக்காவின் செயல்கள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அவர் ஜெசிக்காவின் செல்ஃபி போஸ்களின் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



இதுவரை அந்த வீடியோவை 87 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலரும் ஜெசிக்காவின் தன்னம்பிக்கையை வியந்து பாராட்டியுள்ளனர். ஓடும் ரயிலில், ஹீல்ஸ் ஷூ-வுடன் ஜெசிக்கா செல்ஃபி போஸ் கொடுப்பதை பென், 57 நோடி வீடியோவாக எடுத்துப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு பலருண் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.