​ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் FD வட்டி விகிதம்: ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ரூ.2 கோடிக்கும் குறைவான சில டெபாசிட்டுகளுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. சிறு நிதி வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3 முதல் 8.61 சதவிகித வட்டியை பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதே நேரத்தில், வங்கி மூத்த குடிமக்களுக்கு 3.60 முதல் 9.21 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. அதுமட்டுமின்றி ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிலையான வைப்புத்தொகைக்கான புதிய விகிதங்கள் 28 அக்டோபர் 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

750 நாட்கள் FD (Fixed Deposit Interest Rates) மீது அதிக வட்டி:
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 750 நாட்கள் நிலையான வைப்புகளுக்கு அதிக வட்டியை வழங்குகிறது. இந்த காலகட்டத்தின் நிலையான வைப்புத்தொகைக்கு (FD) வங்கி 8.61 சதவீத வட்டியை பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதே நேரத்தில், வங்கி மூத்த குடிமக்களுக்கு 750 நாட்கள் FDக்கு (Fixed Deposit Interest Rates) 9.21 சதவீத வட்டி அளிக்கிறது.



மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட் செய்தி.. அகவிலைப்படி 50% அதிகரிக்கும்


வங்கியின் வெவ்வேறு காலங்களுக்கான FD விகிதங்கள்:
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 3% வட்டி அளிக்கும். அதே நேரத்தில், வங்கி 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையிலான FDக்கு 4.50 சதவீத வட்டியை வழங்கும். 31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.25% வட்டியும், 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான FD களுக்கு 5.76% வட்டியும் வங்கி வழங்குகிறது. 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலான FD களுக்கு வங்கி 6.25% வட்டி அளிக்கும். அதேசமயம் 181 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான FDக்கு 6.50% வட்டியை வங்கி வழங்கும்.


12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரையிலான FDக்கு 7.50% வட்டியை வங்கி வழங்கும். அதே நேரத்தில், வங்கி 15 மாதங்கள் மற்றும் 1 நாள் முதல் 499 நாட்கள் வரையிலான FDகளுக்கு 7.85 சதவீத வட்டியை வழங்கும். ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 500 நாள் FDக்கு 8.21% வட்டி அளிக்கும். 18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 8.11% வட்டியும், 24 மாதங்கள் முதல் 749 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 8.15% வட்டியும் வங்கி வழங்கும். 1000 நாட்களில் முதிர்ச்சியடையும் FDக்கு 8.41% வட்டியை வங்கி வழங்குகிறது. அதே நேரத்தில், 1001 நாட்கள் முதல் 36 மாதங்கள் வரையிலான FDக்கு 8.11% வட்டியை வங்கி வழங்கும். வங்கி 36 மாதங்கள் முதல் 42 மாதங்கள் வரை எஃப்டிக்கு 8.25% வட்டி அளிக்கும்.


மேலும் படிக்க | இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்று தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ