தியாகிகள் நாள் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவதாகும். தேசத்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மறைந்த ஜனவரி 30 ஆம் தேதி ஆண்டுதோறும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு சுதந்திரம் பெற்றதில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. 1948 ஜனவரி 30 ஆம் தேதி காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் துக்க நாளாக இது அமைந்தது. அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | Budget 2023: சாமானியர்களுக்கு சூப்பர் நியூஸ், இந்த பட்ஜெட்டில் பல மாஸ் அறிவிப்புகள்


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவரது ஆளுமை மற்றும் பங்களிப்புக்காக மகாத்மா காந்தி மற்றும் பாபு போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தி எப்போதும் உண்மை மற்றும் அகிம்சையின் வழியைப் பின்பற்றினார். ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து நாட்டை விடுவிக்க சத்தியத்தையும் அகிம்சையையும் கடைப்பிடித்து வெற்றி பெற்றார். அவரது 'அஹிம்சா பர்மோ தர்ம:' என்ற செய்தி உலகம் முழுவதும் பிரபலமானது. இந்தியா சுதந்திரம் அடைந்த சிறிது காலத்திலேயே மகாத்மா காந்தி இறந்துவிட்டார். ஜனவரி 30, 1948 அன்று மாலை தொழுகைக்குப் பிறகு பிர்லா மாளிகையில் காந்திஜியை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இந்த நாள் வரலாற்றில் கருப்பு தினமாக பதிவு செய்யப்பட்டது.


ஜனவரி 30 அன்று தியாகிகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
மகாத்மா காந்தியின் நினைவு நாளை தியாகிகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இந்த நாளில், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள காந்திஜியின் சமாதிக்குச் சென்று சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜியின் பங்களிப்பை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவார்கள். இதனுடன், நாட்டின் ஆயுதப் படைகளின் தியாகிகளுக்கும் இந்நாளில் மரியாதை செலுத்தப்படுகிறது. காந்திஜியின் நினைவாகவும், தியாகிகளின் பங்களிப்பிற்காகவும் நாடு முழுவதும் இரண்டு நிமிட இந்நாளில் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.


10 மகாத்மா காந்தி பொன்மொழிகள்


* மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது,
உன் வார்த்தையில் இருக்கிறது.
நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.


* உங்களிடம் நகைச்சுவை உணர்வு இல்லையென்றால்,
நீங்கள் தற்கொலை செய்து நீண்டகாலமாகிறது என்று அர்த்தம்.


* கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல.
தன் குற்றம் குறையை உணராமல்
எவன் இருக்கிறானோ அவனே
உண்மையான குருடன்.


* பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று
நீ விரும்புகிறாயோ அது போல் முதலில் நீ மாறு.


*மற்றவர்களை கெட்டவர்கள்
என்று சொல்வதன் மூலம் நாம்
நல்லவர்களாகி விட மாட்டோம்...!


* பிறரை தாழ்த்துபவன்
தானும் தாழ்ந்து போவான்
என்பது இயற்கையின் தர்மம்..!


* மனிதர்களை திருப்தி படுத்த
அனைத்துமே உலகில் உண்டு,
ஆனால் மனிதனின் பேராசையை
திருப்தி படுத்த எதுவும் இல்லை உலகில்.


* நண்பர்களைப் பற்றி
பெருமையாக நிறையப் பேசுங்கள்.
பிடிக்காதவர்களைப் பற்றி
எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.


* எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நட்பல்ல.
கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத்
தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.


* அன்பு எங்கிருக்கிறதோ
அங்கே கடவுள் இருக்கிறார்.


மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட் விவரங்களை உடனடியாக பெற இதை செய்யுங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ