இந்த 5 ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளார் சனி பகவான்: அபாயகரமான 34 நாட்கள்
ஆண்டின் துவக்கமான ஜனவரி மாதத்திலேயே 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவானால் பல தொல்லைகள் ஏற்படவுள்ளன.
Horoscope: 2022 ஆம் ஆண்டு துவங்கிவிட்டது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் மாற்றம் மற்றும் பெயர்ச்ச்சியால் பல ராசிக்காரர்களுக்கு பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.
ஆண்டின் துவக்கமான ஜனவரி மாதத்திலேயே 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவானால் பல தொல்லைகள் ஏற்படவுள்ளன. நீதியின் கடவுளான சனி பகவான், ஜனவரி 24 முதல் பிப்ரவரி 27 வரை மறைந்து இருப்பார். இந்த 34 நாட்களிலும் 5 ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) பல தொல்லைகளை தருவார். சனி பகவானால் தொல்லைகளை அனுபவிக்க உள்ள ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம்.
இந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்:
மேஷம் (Aries): மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் அஸ்தமனம் அசுபமானதாக இருக்கும். பல சிரமங்கள் வரும். சிலருடன் சண்டைகள் ஏற்படலாம். டென்ஷன் இருக்கும். செய்யும் வேலையும் கெட்டுவிடும். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் பொறுமையாக இருப்பது நல்லது.
ரிஷபம் (Taurus): ரிஷப (Taurus) ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் பெயருக்கு களங்கம் வரக்கூடும். எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வேலையை நிதானமாகச் செய்யுங்கள், சர்ச்சைகளைத் தவிர்க்கவும்.
ALSO READ | ஜனவரி 14 முதல் வக்கிரமாகும் புதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனை
மிதுனம் (Gemini): மிதுன ராசியினருக்கு இந்த நேரம் மிகவும் கடினமானதாக இருக்கும். ஏழரை நாட்டு சனியும் சேர்ந்துகொள்வதால், பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆகையால் இந்த காலகட்டத்தில் கவனமாக இருங்கள், இல்லையெனில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
கன்னி (Virgo): கன்னி ராசிக்காரர்கள் கடினமாக உழைத்தாலும் பலன் அதிகம் கிடைக்காது. இந்த காலகட்டத்தில் கன்னி ராசிக்காரகளுக்கு பலருடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொய்யான குற்றச்சாட்டை யார் வேண்டுமானாலும் இவர்கள் மீது சுமத்தலாம். பத்திரமாக இருக்க வேண்டிய காலம் இது. சர்ச்சையில் சிக்காமல் இருப்பது நல்லது.
துலாம் (Libra): துலா (Libra) ராசிக்காரர்களும் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் பண இழப்பு, உறவுகளில் பிரச்சனைகள் ஆகியவற்றை சந்திக்க நேரிடலாம். நிதானமாக வேலை செய்யுங்கள், யாருடனும் பகைமையை வளர்த்துக்கொள்ளாதீர்கள். இந்த நேரத்தில் அபாயகரமான பரிவர்த்தனைகளை செய்யாமல் இருப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | இந்த ராசிக்காரர்கள் டென்ஷனுக்கு டாடா சொல்லி கூலாக இருப்பவர்கள்: உங்க ராசியும் இதுவா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR