புத்தாண்டு பிறக்கவுள்ளது. புதிதாக மலரவுள்ள ஆண்டு நல்ல ஆரோக்கியத்தையும், செல்வச் செழிப்பையும் கொண்டு வரவேண்டும் என்ற ஆசையும் நம்பிக்கையும் அனைவருக்கும் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்களுக்கு புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை அனைவரும் தெரிந்து ஆர்வமாக இருக்கிறார்கள். பலவித கணிப்புகள், அம்சங்கள் கணக்கிடப்பட்டு ஜோதிட கணக்கீடுகள் உருவாக்கப்படுகின்றன. 


உங்கள் புத்தாண்டு எப்படி இருக்கும்? உங்கள் வாழ்க்கையில் நிகழவுள்ள பெரிய மாற்றங்கள் என்ன? சில முக்கியமான கிரகங்களிடம் இவற்றுக்கான பதில்கள் உள்ளன. 


இந்த கிரகங்களில் சனி பகவான்தான் (Lord Shani) பிரதானமாக கருதப்படுகிறார்.  2022-ம் ஆண்டு சனி பகவான் இரண்டு முறை தன் நிலையில் இருந்து மாறுவார். அப்போது அவர் ராசியையும் மாற்றுவார். இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இவற்றில் 8 ராசிகள் மீது இந்த வருடம் முழுவதும் சனியின் கண் பார்வை இருக்கும்.


ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் இடம் பெயர்வார் 


2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். இது அவரது சொந்த ராசியாகும். சனி பகவான் இந்த ராசிக்குள் 30 வருடங்களுக்குப் பிறகு பிரவேசிக்கப் போகிறார். 


சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தவுடன் கடகம் (Cancer) மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் ஆரம்பமாகும். இதனுடன் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியும் தொடங்கும். ஏழரை நாட்டு சனி இந்த ராசிக்காரர்களை பல வழிகளில் தொந்தரவு செய்யும்.


ஆனால் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். சனிபகவான் தனது ராசியான கும்ப ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவார். அவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்வார். இது தவிர, மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கும் சனிபகவானின் ஏழரை நாட்டு சனி நிறைவடையும். இந்த நிவாரணம் அவர்களுக்குப் பல நன்மைகளைத் தரும்.


ALSO READ:ஏழரை சனியிலும் சனி பகவானின் அருளை பெறும் ‘4’ அதிர்ஷ்டக்கார ராசிகள்.!! 


2022-ல் சனி பகவானின் அடுத்த பெயர்ச்சி


2022 ஆம் ஆண்டில், சனி பகவானின் நிலையில் இரண்டாவது மாற்றம் 12 ஜூலை 2022 அன்று நிகழும். இந்த நாளில் சனி பகவான் பின் நோக்கி நகர்ந்து முந்தைய ராசியான மகர ராசிக்குள் நுழைவார். 


இந்த பெயர்ச்சியால், தனுசு, மிதுனம் மற்றும் துலாம் (Libra) ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மீண்டும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜனவரி 17, 2023 வரை சனி பகவான் இந்த ஸ்தானத்தில் இருப்பார். எனினும் இக்காலத்தில் மீனம், கடகம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தோஷம் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ:Weekly Horoscope: இந்த 3 ராசிக்காரர்களிடம் இந்த வாரம் கவனமாக இருங்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR