Gold Silver Price Today: திருமண சீசன் தொடங்கிய உடனேயே தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் தங்கம் வாங்கும் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியாக, தங்கத்தின் விலை புதிய சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் மக்கள் தங்கம் வாங்க அதிகம் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கம் (Gold) மற்றும் வெள்ளியின் விலையில் தொடர்ந்து ஏற்றத்தைக் காண முடிகின்றது. இன்று மீண்டும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) டிசம்பர் மாத டெலிவரிக்கான தங்கத்தின் விலை 0.11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் 0.26 சதவீதம் குறைந்துள்ளது.


புதிய உச்சத்தை நோக்கி நகரும் தங்கம்!


பண்டிகை காலம் முடிந்துவிட்டது. தீபாவளியன்றும் (Diwali) தங்கம் அமோகமாக விற்பனையானது. பண்டிகைக் காலம் முடிந்து தற்போது திருமண சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்றம் இருக்கும் என ஏற்கனவே யூகிக்கப்பட்டது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.50,000-ஐ நெருங்கியுள்ளது.


ALSO READ:Paytm IPO: முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் மக்கள், வல்லுனர்களின் கணிப்பு என்ன? 


இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன?


இன்று காலை நிலவரப்படி, சென்னையில், 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,625 ஆக இருந்தது. 18 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 3,789-க்கும் 14 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,001-க்கும் விற்பனை ஆனது.


இன்று காலை நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 71.00 ஆக உள்ளது. 


இந்த வழியில் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம்


நீங்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க விரும்பினால், இதற்காக அரசாங்கத்தால் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 'பிஐஎஸ் கேர் ஆப்' (BIS Care app) மூலம், வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம். இந்த செயலி (App) மூலம் தங்கத்தின் தூய்மையை மட்டும் சரிபார்ப்பது மட்டுமல்லாமல், அது தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம்.


மிஸ்டு கால் கொடுத்து தங்கத்தின் விலையைக் கண்டறியலாம்


வீட்டிலிருந்தபடியே தங்கத்தின் விலையை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். விலைகளை தெரிந்துகொள்ள 8955664433 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் அளிக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும். அதில் நீங்கள் சமீபத்திய கட்டணங்களைச் சரிபார்க்கலாம்.


ALSO READ:Gold Hunt: தங்கப் புதையலை கண்டுபிடித்த இந்தோனேசிய மீனவர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR