Indian Railways Latest News: இந்தியாவின் ரயில் பயணிகளுக்கு முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. ரயில் பயணத்தின் போது இதுவரை கிடைத்து வந்த ஒரு முக்கிய வசதி இனி கிடைக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அரசு (Indian Government) கடந்த சில ஆண்டுகளாக பயணிகளின் வசதிக்காக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை வழங்கி வருகிறது. நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை இணைப்பை வழங்கிய பிறகு, நாடு முழுவதும் ஓடும் ரயில்களில் இலவச வைஃபை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது.


2019 ஆம் ஆண்டில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், நான்கரை ஆண்டுகளில் ரயில்களுக்குள் வைஃபை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால் அதில் பல சவால்கள் இருந்தன. இதன் காரணமாக இந்த திட்டம் தற்போது ரயில்வேயின் பணித்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.


பயணிகளுக்கு வைஃபை சேவை கிடைக்காது


இப்போது இந்த வைஃபை திட்டம் இந்திய ரயில்வே பணித்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. பிடிஐ அறிக்கையின்படி, லாபகரமாக இல்லாததால், ரயில்களில் இணைய இணைப்பை வழங்கும் திட்டத்தை ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது. இதை நாடாளுமன்றத்தில் அரசு உறுதி செய்தது.


ALSO READ: ரயிலில் பயணம் செய்யும் முன்பு, முதலில் இந்த பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும்


ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்த பைலட் திட்டத்தின் கீழ், ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் செயற்கைக்கோள் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் அரசு வைஃபை இணைய வசதியை வழங்கியது என்றார்.


ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்த பைலட் திட்டத்தின் கீழ், ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் செயற்கைக்கோள் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் அரசு வைஃபை இணைய வசதியை வழங்கியது. இந்த பணித்திட்டத்தின் பைலட், அதவாது துவக்க நிலை செயல்பாடுகளின் போது, தொழில்நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்படுவதற்கு தேவைப்படும்  மூலதனம் மற்றும் அலைவரிசை கட்டணங்கள் போன்று தொடர்ச்சியாக ஏற்படும் செலவுகள் ஆகியவை இந்த திட்டத்தின் செலவை அதிக அளவு உயர்த்துகின்றன என்பது கண்டறியப்பட்டது. இவற்றால் இந்த திட்டம் லாபகரமானதாக இல்லை. மேலும், ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட இணைய அலைவரிசை போதுமானதாகவும் இல்லை.” என்றார்.


ரயில்களில் (Indian Trains) வைஃபை இணைய சேவைகளுக்கு பொருத்தமான, மலிவான தொழில்நுட்பம் இப்போதைக்கு எதுவும் இல்லை என்றும் ரயில்வே அமைச்சர் கூறினார்.


RailTel நெட்வொர்க் வசதி


தற்போது இந்திய ரயில்வே 6,000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வைஃபை இணைய வசதியை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் ரெயில்டெல் நெட்வொர்க்கால் வழங்கப்படுகிறது. ரெயில்டெல் இந்த வைஃபை சேவைகளை ரெயில்வயரின் கீழ் வழங்குகிறது. இது அதன் பிராட்பேண்ட் விநியோக மாதிரியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, கூகுளின் (Google) ஸ்டேஷன் புரோகிராம், 2016 ல் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கியது. 2018 ல் அசாமின் திப்ருகரில் இந்த திட்டத்தின் கீழ் 400 வது ரயில் நிலையம் இணைக்கப்பட்டது.


ALSO READ: IRCTC New Rule: ஆதார் அட்டையுடன் IRCTC கணக்கை இணைத்தால் மிகப்பெரிய நன்மை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR