இன்றைய கேஸ் சிலிண்டர் விலை நிலவரம்: கடந்த பல மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித நிவாரணத்தையும் நம்மால் பெற முடியவில்லை. அதன்படி தற்போது இந்த ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதமும் அரசு எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. இந்த அறிவிப்பு வெளியானதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். எனவே நீங்களும் இந்த மாதம் எல்பிஜி சிலிண்டர் விலையை முன்பதிவு செய்யப் போகிறீர்கள் என்றால், அதற்கு முன் உங்கள் நகரத்தில் 14.2 கிலோ சிலிண்டரின் விலை என்ன என்பதைச் சரிபார்க்கவும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஓசிஎல் வெளியிட்ட புதிய விலை நிலவரம்
இந்தியன் ஆயில் இணையதளத்தின்படி, இன்று வீட்டு கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக கேஸ் சிலிண்டர் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த மாதம் வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.115.50 குறைக்கப்பட்டது. அந்த வகையில் தொடர்ந்து 6 முறையாக 19 கிலோ சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், உயர்ந்தது டிஏ, இரு தவணைகளில் அரியர்


உங்கள் நகரத்தின் கேஸ் சிலிண்டர் விலையை இங்கே சரிபார்க்கவும்,
இந்த நிலையில் நாட்டின் தலைநகர் டெல்லியைப் பற்றி பேசுகையில், டிசம்பர் 1, 2022 அன்று, வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1053க்கு விற்கப்படுறது. இது தவிர கொல்கத்தாவில் ரூ.1079 ஆகவும், மும்பையில் ரூ.1052.50 ஆகவும், சென்னையில் ரூ.1068.50 ஆகவும் கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. 



கடைசியாக எப்போது விலையில் மாற்றம் ஏற்பட்டது 
கடைசியாக 14 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை அக்டோபர் 6ஆம் தேதி மாற்றப்பட்டது. அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு எல்பிஜி விலை ரூ.15 ஆக உயர்த்தப்பட்டது. அதேசமயம், இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 22ம் தேதி, விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


வணிக எரிவாயு சிலிண்டர் விலை 
>> டெல்லி - ரூ 1744 
>> மும்பை - ரூ 1696
>> சென்னை - ரூ 1891.50
>> கொல்கத்தா - ரூ 1845.50


மேலும் படிக்க | துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 6 பேர் பலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ