தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் படித்து முடிப்பவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். இவை தவிர தொழில்நுட்பக் கல்வித் தகுதிகளை பதிவுசெய்வதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும். அப்போதுதான் சீனியாரிட்டி அமலில் இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


மேலும் படிக்க | லட்சத்தில் சம்பளம்... தமிழ் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு


இந்நிலையில், 30.04.2022 அன்றுள்ள நிலவரப்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.  அதன்படி, மொத்த பதிவுதாரர்களின் எண்ணிக்கை 76 லட்சத்து 35 ஆயிரத்து 59 ஆக உள்ளது. 24 வயது 35 வயது வரையுள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை மட்டும் 28 லட்சத்து 93 ஆயிரத்து 506 ஆகும்.


அதேபோல், 19 முதல் 23 வயது வரை உள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 83 ஆயிரத்து 755 ஆக உள்ளது. மொத்த பதிவுதாரர்களில் இளங்கலை படிப்பு மற்றும் பிஎட் படித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 795 ஆகவும், முதுகலை படிப்பு மற்றும் பிஎட் படித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 350 ஆகவும் அதேபோல், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 470 ஆகவும் உள்ளன.


மேலும் படிக்க | ரூ 44000 சம்பளத்துடன் ICAR வேலை வாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR