ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சேவ் இருவரும் சில காலமாகவே நெருங்கி பழகி வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இந்தியா வந்த மைக்கேல் தனது தாயிடம் அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதிஹாசன். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது.  


சில தினங்களுக்கு முன்பு மைக்கேல் கோர்சேவுக்கு பிறந்தநாள் இருந்தது அந்த சமயம் அவர் லண்டனிலும் ஸ்ருதிஹாசன் இந்தியாவிலும் இருந்தார்.


இந்நிலையில், தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டு உள்ளர். அதில்,
‘என் நெருங்கிய நண்பர், முக்கிய தருணங்களில் உடன் இருப்பவர், விசித்திரமான உரையாடல்களில் சிறந்தவர், கலை உலகில் உடன் பயணிப்பவர். எல்லாவற்றுக்கும் மேலாக என்னுடைய எல்லா சுற்றிலும் கூடவே சிரிப்பவர். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.