நீயே இப்படி பேசலாமா! வைரலாகும் சிம்பு - ஆதிக் போன்கால்!
நடிகர் சிம்புவை பற்றி சமீபகாலமாக தவறான தகவல்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இறுதியாக அவர் நடித்த `AAA` பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கியனார் நடிகர் சிம்பு.
நடிகர் சிம்புவை பற்றி சமீபகாலமாக தவறான தகவல்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இறுதியாக அவர் நடித்த 'AAA' பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கியனார் நடிகர் சிம்பு.
இந்நிலையில், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் சிம்பு போனில் பேசிய ஆடியோ லீக் ஆகி இருக்கிறது. 'AAA' படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்தார். மேலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சிம்புவை குற்றம் சாட்டினார்.
இந்த சர்ச்சையால் நடிகர் சிம்பு 'படம் ஓடாததற்கு நான் தான் காரணம்' எனக் கூறி மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்தார். தற்போது நடிகர் சிம்பு மணிரத்னம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 'AAA' படத்தின் தோல்விக்கு குற்றம் சாட்டியது குறித்து சிம்பு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோவில், சிம்பு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் மிகவும் வருத்தப்பட்டு தனது நிலையை எடுத்துக் கூறியுள்ளதாக பதிவாகியுள்ளது. வருத்தப்பட்ட சிம்பு இந்த ஆடியோவில் ஆதிக் மீது பரிவு கொண்டவராக பேசியிருக்கிறார். "கூடவே இருந்த நீயே இப்படிப் பேசினது வருத்தமாக இருக்கு. வேற யார் சொல்லி இருந்தாலும் அது எனக்கு பெரிய பிரச்னை இல்லை. உனக்காக தான் நான் தப்பு பண்ணேன்னு மன்னிப்பு கேட்டேன்" எனக் கூறியுள்ளார். நீயே இப்படி பேசலாமா? "பாத்ரூம்ல உட்கார்ந்து டப்பிங் பேசுனேன். ஸ்கிரிப்ட்டை வாங்கினேன்னுலாம் சொல்லியிருக்கீங்க. யார் என்ன சொன்னாலும் என்னைப் பத்தி தெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா. என அந்த ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது.