உங்கள் காரில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் தப்பிப்பது எப்படி?
காரில் வேகமாக செல்லும்போது திடீரென பிரேக் பிடிக்காமல் போகலாம். அந்த சமயத்தில் நீங்கள் துரிதமாக செய்ய வேண்டிய சில டிப்ஸ்
கார் வாங்கி குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்பது பலரின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்குள் நடுத்தர மக்களில் பலரும் தங்கள் வாழ்நாளில் பாதி வாழ்கையையே வாழ்ந்துவிடுகின்றனர். இதுஒருபுறம் இருக்க, கார் வாங்கும்போது, அதனை ஓட்டும்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை தெரிந்து கொண்டால் ஆபத்தான நேரங்களில் தங்களை மட்டுமல்லாமல், உடனிருப்பவர்களின் உயிரையும் காப்பாற்றலாம்.
எப்போது காரை ஓட்டும்போது மிக முக்கியமாக காரின் டயர் மற்றும் பிரேக்கை கட்டாயம் செக் செய்ய வேண்டும். அவற்றை முறையாக பராமரித்தாலே நீங்கள் பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். ஒருவேளை தூர பயணத்தில் நீங்கள் இருக்கும்போது திடீரென காரில் பிடிக்காமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது. அப்படியானால், கணப்பொழுதில் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
பிரேக் பிரஷர்
இப்போது வரக்கூடிய கார்களின் ஹைட்ராலிக் பிரேக்குகள் கொடுக்கப்படுகிறது. சில சமயம் ஹைட்ராலிக் பிரேக்கில் போதுமான பிரஷர் இல்லை என்றால் பிரேக் பிடிக்காத சூழ்நிலை ஏற்படும். அந்த நேரத்தில் பிரேக்கை பம்ப் செய்தால் ஹைட்ராலிக் பிரஷர் அதிகமாகும். பின்னர் சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் பிரேக் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
காரை ஆப் செய்யாதீர்கள்
திடீரென்று காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் பதட்டமான சூழ்நிலையில் பெரும்பாலானோர் காரை ஆப் செய்து விடுகின்றனர். அவ்வாறு கட்டாயம் செய்யக்கூடாது. ஆப் செய்தால் கார் நின்று விடும் என்பது தவறு. எல்லா கார்களிலுமே ஸ்டேரிங் லாக் என்ற ஆப்ஷன் உள்ளது. கார் ஆப் ஆனால் ஸ்டேரிங் லாக் ஆகிவிடும். சில சூழ்நிலைகளில் காரை வளைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஸ்டேரிங் லாக்காக இருக்கும்போது அதனைத் திருப்புவது கடினமாகிவிடும். அதனால் காரை ஆப் செய்யக்கூடாது.
ஹாண்ட் பிரேக்
பிரேக் பிடிக்கவில்லை என்று தெரிந்தவுடன் உடனே ஹாண்ட் ரைட்டிங் போடக்கூடாது. அவ்வாறு செய்தால் ஹேண்ட் பிரேக் சேதம் ஆகிவிடும். இருக்கும் ஒரு வழியும் இல்லாமல் போய்விடும். காரின் வேகத்தைக் குறைப்பதற்காக ஹேண்ட் பிரேக்கை மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது விட்டு விட்டு ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்த வேண்டும்.
காரின் வேகத்தைக் குறைக்க
பிரேக் வேலை செய்யாமல் போய்விட்டால் கியர் மூலம் படிப்படியாகக் குறைத்து காரின் வேகத்தைக் குறைக்க முடியும். அதாவது எஞ்சின் வேகத்தைக் குறைப்பதற்காக கியரை அடுத்தடுத்த கட்டத்தில் ஒவ்வொன்றாகக் குறைத்து காரை ஓரமாக நிறுத்தம் முயற்சி செய்யலாம். அதிகப்படியான சேதத்தைத் தராவிட்டாலும் தப்பிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படிக்க | வீடு வாங்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ