இரட்டை குழந்தையாக பிறந்த ஆறு வயது அண்ணன் தங்கைக்கு திருமணம் நடத்தி வைத்த பெற்றோர்கள்..... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 


திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், தாய்லாந்தில் ஒட்டிப்பிறந்த 6 வயது அண்ணன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பேரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தாய்லாந்து பாங்காக்கைச் சேர்ந்த அமோர்னசன் என்ற தம்பதியினருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு தற்போது சரியாக ஆறு வயது நடந்து கொண்டிக்கும் நிலையில் அவர்கள் இருவருக்கும் அவர்களது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். 




இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஊரு வழக்கப்படி இரட்டை குழந்தைகள் பிறந்தால், போன ஜென்மத்தில் காதலர்களாக இருந்து பிரிந்ததால் தற்போது இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மணமகனுக்கு வரதட்சணையாக 2 லட்சம் பர்கத்கள் வழங்கப்பட்டுள்ளன.


இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளதால் இதனைக் கண்டவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.