Skin Care tips: அழகிய முகம் மற்றும் சிறந்த தோற்றம் கிடைக்க சருமம் மிகவும் முக்கியம். சரும பராமரிப்பு  என்பது மிகவும் முக்கியமானது. கிளிசரின் உடலின் முக்கியமாக முக சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. முக பளபளப்பிற்கு, மென்மையான சருமத்திற்கு பலர் கிளிசரினை பயன்படுத்துகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் சருமத்தில் கிளிசரின்  எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதனை தெரிந்து கொண்டால் கிளிசரினின் நன்மைகளை முழுமையாக பெறலாம்.


கிளிசரின் எப்படி தயாரிக்கப்படுகிறது? கிளிசரின் என்றால் என்ன


கிளிசரின் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சரும நிபுணர் டாக்டர் கீதிகா மித்தல் கூறினார்.  கிளீசரின் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் சர்க்கரையுடன் சேர்த்து புளிக்கவைக்கப்பட்டு செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. கிளிசரின் நிறமற்ற திரவம், அதில் வாசனை இல்லை. இதனுடன், கிளிசரின் மாய்ஸ்சரைசர், க்ளென்சர் மற்றும் சீரம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.


ALSO READ | Health Tips: உடல் எடை குறைய ஓமம் -சீரகம் அடங்கிய ‘மேஜிக் பானம்’


முகத்திற்கு கிளிசரின்: கிளிசரினை நீங்கள் முகத்தில் கிளிசரின் தடவ விரும்பினால், இரவில் முதலில் முகத்தை சுத்தம் செய்து துண்டால் ஈரம் போக துடைக்கவும். இதற்குப் பிறகு, அரை கப் தண்ணீரில் சில துளிகள் கிளிசரின் கலக்கவும். இப்போது அந்த தண்ணீரில் ஒரு பருத்தி உருண்டையை நனைத்து தோலில் தடவவும். வாய் அல்லது கண்களுக்கு அருகில் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


கிளிசரின் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்


கிளிசரின் சாதாரண, வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தின் மீது பயன்படுத்தப்படலாம். இது சருமத்தை மென்மையாக்கி பளபளப்பை அளிக்கிறது. இதனுடன், சருமத்தின் நிறமும் மேம்படுகிறது மற்றும் தோல் நோய்களின் ஆபத்து குறைகிறது. மேலும், இது முகத்தில் ஈரப்பதமாக்குவதற்கும், டோனிங் செய்வதற்கும் உதவுகிறது. இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. 


ALSO READ | Health Tips: முதுமையை தள்ளிப்போட வேண்டுமா; ‘இந்த’ பழக்கங்கள் கூடாது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR