Health Tips: முதுமையை தள்ளிப்போட வேண்டுமா; ‘இந்த’ பழக்கங்கள் கூடாது

தலைமுடி நரைத்தல், தோல் சுருக்கம், சருமம் பொலிவை இழத்தல் ஆகியவை முதுமை உங்களை எட்டி விட்டது என்பதற்கான அறிகுறிகள்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 22, 2021, 03:29 PM IST
  • ஆழ்ந்த தூக்கம் நம் உடலின் செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது.
  • இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கணினிகளுக்கு முன்னால் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள்.
  • ஆரோக்கியமான உணவு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
Health Tips: முதுமையை தள்ளிப்போட வேண்டுமா; ‘இந்த’ பழக்கங்கள் கூடாது  title=

உலகில் எந்த சக்தியும் முதுமையை தடுத்து நிறுத்த முடியாது என்பது உண்மைதான். ஆனால் முதுமை வருவதை ஒத்தி போட முடியும். இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் பலர் சீக்கிரமே முதியவர் போல் தோற்றமளிப்பதையும் பார்க்கிறோம். முதுமைக்கான  அறிகுறிகள், உடல் பலவீனம், தோலில் சுருக்கங்கள்,  பொலிவிழந்த சருமம், நரை முடி, வழுக்கை, நீரிழிவு, பிபி போன்ற வயதானவர்களின் நோய்கள் போன்றவை வருவதை நிச்சயம் தடுக்கலாம். உண்மையில், சிறு வயதிலேயே முதுமையின் இந்த அறிகுறிகள் தோன்றுவதற்குப் பின்னால், நமது சில பழக்கங்கள் முக்கிய காரணம்

முன்கூட்டிய முதுமை வருவது மருத்துவ மொழியில் Premature Aging என்று அழைக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க, இந்த பழக்கங்களை இன்று முதல் மேம்படுத்த வேண்டும்.

1. சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது
சூரிய ஒளி நிச்சயம் உடலுக்கு தேவை. ஆனால், உங்கள் தொழில் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நீங்கள் வெயிலில் அதிக நேரம் செலவிட்டால், அது உங்கள் சருமத்தை பாதிக்கும். மத்தியானம் வேளையில், கடுமையான சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் உங்கள் சரும செல்களில் இருக்கும் டி.என்.ஏவை சேதப்படுத்தி, சருமம் கருத்து, சுருக்கங்களும் ஏற்படும். இதை தவிர்க்க சன்ஸ்கீரின் லோஷன் பயன்படுத்தவும்.

ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்

2. புகை பழக்கம்
இப்போதெல்லாம் குழந்தைகள் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். புகையிலையில் உள்ள நச்சுகள் சருமத்தின் ஆக்ஸிஜனேற்றத்தை பாதிக்கின்றன. அதனால் சருமம் உயிரற்ற வறண்ட சருமாக மாறி, சுருக்கங்கள் உண்டாகி, முதுமை தோற்றம் ஏற்படுகிறது

3. ஆல்கஹால் மற்றும் காஃபின் உட்கொள்ளல்
ஆல்கஹால் மற்றும் காஃபின்  அதிகம் எடுத்துக் கொள்வதால்,  உடலில் உள்ள நீர் சத்து பெருமளவில் குறைகிறது. நீங்கள் அதிகப்படியான ஆல்கஹால் அல்லது காஃபின் அதிகம், உள்ள தேநீர் மற்றும் காபியை அதிகம் உட்கொள்வதால், செல்கள் உயிரிழந்து உங்கள் தோல், முடி மற்றும் பிற உறுப்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன.

ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்

4. மன அழுத்தம்
சிலருக்கு எல்லாவற்றையும் மனதில் போட்டுக் கொண்டு அதிகம் சிந்திக்கும் பழக்கம் உண்டு. இது மன அழுத்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதனுடன், இது உங்கள் உடலில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகம் சுரந்தால், அதனால், முதுமை விரைவில் உங்களை ஆட்க்கொள்ளும்

5. மடிக்கணினி, மொபைல், டிவியை அதிகம் பயன் படுத்துதல்
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரம் காரணமாக, குழந்தைகள்மடிக்கணினிகள், மொபைல்கள் மற்றும் டிவிகளில் அதிக நேரம் செலவிடுகிறர்கள், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கணினிகளுக்கு முன்னால் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாக மன அழுத்தம், உடல் பருமன், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளால் உங்கள் உடலை பாதிக்கும். முடிந்த அளவு அதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்

 

6. குறைவான தூக்கம் மற்றும் துரித உணவுகள் 
ஆழ்ந்த தூக்கம் நம் உடலின் செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது. ஆரோக்கியமான உணவு செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இந்த காரணத்தால், குறைவான தூக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளும் நபர்கள் உடல், பல தோல் மற்றும் உடல் பிரச்சினைகளுக்கு விருந்தாகிறது. நீங்கள் தினமும் 6-8 மணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். உங்கள் உணவில் புரதம், இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேர்க்க வேண்டும்.

இங்கே வழங்கப்பட்ட தகவல்கள் எந்தவொரு மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை. இது பொதுவான விழிப்புணர்வுக்கான நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன
 

 

Trending News