இந்தோனேசியாவின் Smoked Garage என்னும் பட்டறை ஊழியர்கள் பிரபல Royal Enfield Himalayan வாகனத்தினை முழுமையாக உருமாற்றி Project SG411 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உருமாற்றம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பாகமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தரமான பொருள் கொண்டு இந்த Project SG411 வடிவமைக்கப்பட்டுள்ளது என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய தோற்றம் கொடுக்க வேண்டும் என்பதற்காக முகப்பு லைட், டையர்கள் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது.



Project SG411 வாகனமானது உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறுவதற்கு பதிலாக முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். எனினும் RE Himalayan வாகனத்தின் என்ஜினில் சிறு மாற்றங்களும் செய்யாமல் இந்த Project SG411-ல் பொறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வாகனமானது 411 cc திறனுடன் இயங்கும் வல்லமை படைத்தது என வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



புதிய வாகன வடிவமைப்பினை போன்றே மெனக்கிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் ஆனது தனக்கென தனி வண்ணம், வடிவமைப்பு என ராசிகர்களை கவர்ந்துள்ளது.


ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த வாகனமானது மலை பகுதிகளில் கர்ஜிக்கும் என வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 



RE Himalayan வாகனத்தினை காட்டிலும் தற்போது 20kg எடை குறைக்கப்பட்டுள்ள Project SG411, ஒரு பயணிக்கான இருக்கையினை மட்டும் கொண்டுள்ளது. சாகச பயண விரும்பிகளுக்கு இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.