புதிதாக சிம் கார்ட் வாங்க போறிங்களா? இதை மட்டும் மறந்துராதீங்க!
வாடிக்கையாளர்கள் வாங்கும் புதிய சிம் கார்டை பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனை, ஏதேனும் செயலிகள் அல்லது லிங்குகள் மூலம் மோசடி நடைபெறுவது பற்றி நமக்கு தெரிந்த ஒன்று, ஆனால் தற்போது சிம் கார்டு மாற்றி மோசடி செய்யும் போக்கு அதிகரித்து வருகின்றது. மொபைல் பயன்படுத்துபவர்களை குறிவைத்து செய்யப்படும் இந்த மோசடியை தடுக்கும்பொருட்டு எஸ்எம்எஸ் தொடர்பான புதிய விதியை டெலிகாம் துறை உருவாக்கியுள்ளது. இந்த விதியினை இந்தியாவின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு நிறுவனமும் அதன் புதிய சிம் கார்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்போதெல்லாம், முதல் 24 மணி நேரத்திற்கு எஸ்எம்எஸ்-ன்இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங்க் சேவைகள் நிறுத்தும், இதன் மூலம் சிம் பரிமாற்ற மோசடி தடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு
சிம் கார்டு பரிமாற்ற மோசடியில் மோசடிக்காரர்கள் புதிய சிம் பெற்றவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அதன் மூலம் அந்த நபர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துவிடுகின்றனர். அந்த வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவலைப் பெற்ற பிறகு, மோசடி செய்பவர்கள் டெலிகாம் ஆபரேட்டரைத் தொடர்புகொண்டு அந்த வாடிக்கையாளர் பயன்படுத்தும் அதே புதிய சிம்மைக் கேட்கின்றனர். புதிய சிம் கார்டு மோசடி கும்பலுக்கு கிடைத்தவுடன் பயனரின் போனில் இயங்கும் சிம் கார்டின் சேவை நின்றுவிடும். இதற்குப் பிறகு மோசடி செய்பவர்களிடம் இருக்கும் புதிய சிம்மில் அனைத்து விவரங்களும் வர தொடங்கிவிடும். வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்கள் ஃபிஷிங் இணைப்பு மூலம் மோசடிக்காரர்களுக்கு கிடைத்துவிடுகிறது. அவர்கள் இந்த இணைப்பை உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம், அந்த இணைப்பை நீங்கள் க்ளிக் செய்த பிறகு உங்களது தனிப்பட்ட தகவல்கள் மோசடி கும்பலுக்கு கிடைத்துவிட அவர்கள் உங்கள் பழைய சிம்மை வைத்து புதிய சிம்மை பெற்று மோசடி செயலில் ஈடுபடுகின்றனர்.
அந்த புதிய சிம்மை அவர்கள் பெற்றதும் நமது தனிப்பட்ட தகவல்களுக்கு தேவையான ஓடிபி-க்களும் அவர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது, இந்த ஓடிபிக்களை வைத்து அவர்கள் பல நிதி சம்மந்தமான மோசடிகளையும் செய்ய நேரிடும் அபாயம் உள்ளது. இவ்வாறு மோசடி குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவே தொலைத்தொடர்பு துறை புதிய விதியை கொண்டு வந்துள்ளது, இதனை செயல்படுத்த 15 நாட்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய சிம் அல்லது எண்ணை அப்க்ரேட் செய்வதற்கான கோரிக்கையைப் பெற்றால் இதுபற்றிய தகவலை உடனடியாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதன் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், கால் செய்து உறுதிப்படுத்தினால் மட்டுமே அவர்களுக்கு புதிய சிம் கார்டு வழங்க வேண்டும் என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ், ஜனவரியில் மாபெரும் டிஏ ஹைக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ