ஊழியர்களின் ஓய்வு நேரத்தை குறைக்கும் 13° கழிப்பறை...
கழிவறையில் அதிக நேரம் செலவிடும் ஊழியர்களின் ஓய்வு நேரத்தை குறைக்கும் விதமாக 13° கழிப்பறை என்னும் புதிய கழிப்பறையினை முதலாளிகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கழிவறையில் அதிக நேரம் செலவிடும் ஊழியர்களின் ஓய்வு நேரத்தை குறைக்கும் விதமாக 13° கழிப்பறை என்னும் புதிய கழிப்பறையினை முதலாளிகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பான செய்தி இணையத்தில் பரவிவரும் நிலையில்., சில சமூக ஊடக பயனர்கள் இந்த புதிய கழிப்பறை கண்டுபிடிப்பு குறித்து முதலாளித்துவத்தை அவதூறாகப் பேசிவருகின்றனர். அதேவேளையில் மற்றவர்கள் தலைகீழாக இந்த கழிவறை குறித்து நகைச்சுவையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்க புதிய வழிகளை உருவாக்க முயற்சிக்கும்போது, இந்த இலக்கைப் பின்தொடர்வதற்காக ஒரு துணிகர கழிவறை பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் 13° கழிப்பறை என்னும் புதிய கழிப்பறையினை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்டாண்டர்டு டாய்லெட் என்று அழைக்கப்படும் இந்த கழிவறையானது 13 டிகிரி(13°) கீழ்நோக்கி சாய்ந்திருக்கும் ஒரு கழிப்பறை ஆகும். இந்த கழிவரையில் 5 நிமிடத்திற்கு மேல் அமர்ந்திருந்தால் சங்கடமான சூழல் உண்டாக்கும் எனவும், அடி கால் பகுதியில் வலியினை உண்டாகும் எனவும் கருதப்படுகிறது. இதனால் இந்த கழிவறைகளை அலுவலகத்தில் பயன்படுத்தினால் தொழிலாளர்கள் கழிவறையில் குறைந்த நேரத்தையே செலவிடுவர் எனவும் நிறுவனங்கள் நம்புகிறது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க இந்த கழிவறையினை மறைமுகமாக பயன்படுத்துகிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பிரபல நிறுவனத்தில் ஆய்வு அறிக்கையின் படி "ஊழியர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 10 நிமிடங்கள் கழிப்பறைக்கு செலவிடுகிறார்கள் என்றும், ஆண்டுதோறும் 4 பில்லியன் டாலர் இதனால் நிறுவனங்களுக்கு நட்டம் எற்படுகிறது என்றும்" குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்களின் ஓய்வு நேரத்தை குறைக்கும் பொருட்டு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள இந்த ஸ்டாண்டர்டு டாய்லெட் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த வளர்ச்சியால் சமூக ஊடக பயனர்கள் மகிழ்ச்சியடைவதைக் காட்டிலும் குறைவாகவே தோன்றினர், கார்ப்பரேட் கொள்கைகள் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவத்தைப் பற்றியும் விமர்சனக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சில நெட்டிசன்கள் பரிந்துரைகளையும் அளித்துள்ளனர்.