சூரிய கிரகணத்தன்று இவற்றை தானம் செய்தால் உங்கள் வாழ்வில் செல்வமும் மகிழ்ச்சியும் பொங்கும்
சூரிய கிரகணத்தின் போது தானம் செய்வது குடும்பத்தின் நிதி பிரச்சினைகளை நீக்குகிறது என்றும் பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் காக்கிறது என்றும் கூறப்படுகிறது.
நமது கலாச்சாரத்தில், கிரக நிலைகளுக்கும் கிரக மாற்றங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரகணங்களிலும் நாம் தொன்றுதொட்டு பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இன்று, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான விளைவுகளையும் சிலருக்கு எதிர்மறையான விளைவுகளையும் கொண்டு வரும். நாம் இருக்கும் பகுதியில் கிரகணங்கள் தெரிந்தால், இந்த விளைவுகள் அதிகமாகவும், கிரகணம் தெரியாவிட்டால், விளைவுகள் குறைவாகவும் இருக்கும் என்பது ஜோதிடர்களின் கூற்று.
இன்று நிகழும் கிரகணம் இந்தியாவில் (India) காணப்படாது என்றாலும், கிரகணத்தின் விளைவுகள் சிறிய அளவில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும். ஜோதிடத்தின் படி, பொதுவாக கிரகண காலத்தில் அளிக்கப்படும் தானங்களுக்கும் நன்கொடைகளுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது.
சூரிய கிரகணத்தின் (Solar Eclipse) போது தானம் செய்வது குடும்பத்தின் நிதி பிரச்சினைகளை நீக்குகிறது என்றும் பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் காக்கிறது என்றும் கூறப்படுகிறது. சூரிய கிரகண நாளில் பொருட்களை நன்கொடையாக வழங்குவது, நன்கொடை அளிப்பவருக்கும் அதைப் பெருபவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. இப்படிச் செய்வதால், தானம் பெற்றவரின் ஆசி கிடைத்து வீட்டில் ஒருபோதும் பணப் பற்றாக்குறை வராது என்று நம்பப்படுகிறது.
பொதுவாக, கிரகண தினத்தன்று இந்த பொருட்களை நன்கொடையாக வழங்கினால் நன்மை வந்து சேரும். தானம் வழங்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கிரகத்தை திருப்திபடுத்தும் தன்மை கொண்டவை.
கிரகண தினத்தன்று இவற்றை தானம் செய்தால் நன்மை பிறக்கும்:
-கல்கண்டு, வெல்லம், பானகம் போன்ற இனிப்புப் பண்டங்கள். (சூரிய பகவானை (Sun God) திருப்திபடுத்தும்)
-அரிசி, சமைத்த கலந்த சாதங்கள், சர்க்கரைப் பொங்கல் (சந்திரன், சுக்கிரனை திருப்திபடுத்தும், சந்திர தோஷம் நீங்கும்)
-கொண்டைக்கடலை (குரு பகவானை திருப்திபடுத்தும்)
-பயத்தம் பருப்பு, பயறு வகைகள் (புதன் கிரகம் அனுகூலமாக இருக்கும்)
-உளுத்தம் பருப்பு, உளுந்து தின்பண்டங்கள் (சனிபகவான், ராகு பகவானுக்கு அனுகூலமாக இருக்கும்)
-கோதுமை (சூரியன் சுமுகமான நன்மைகளைத் தருவார்)
-பருப்பு வகைகள் (செவ்வாயால் (Mars) நன்மை ஏற்படும்)
ALSO READ: Solar Eclipse: சூரிய கிரகணத்தைப் பற்றிய இந்த விஷயங்கள் தெரியுமா?
கிரகண தினத்தில் தானம் வழங்கினால், இந்த சிக்கல்களுக்கும் முடிவு பிறக்கும்:
சூரிய கிரகணத்தின் போது செய்யப்படும் நன்கொடைகள் மற்ற கிரகங்களின் குறைபாடுகளையும் நீக்குகின்றன என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்தில் அளிக்கப்படும் தானமானது வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் அனைத்து துன்பங்களையும் போக்குகிறது. இந்த நேரத்தில் ஒருவர் தன்னால் முடிந்த அளவு, தனது தகுதிக்கு ஏற்ப தானம் செய்வது சிறந்தது. ஆடம்பரமாகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ தானம் செய்யக்கூடாது.
சூரிய கிரகணத்தில் ஒருவர் ஒரு சிறிய தானத்தை செய்தால் கூட, அவரது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்திருக்கும். ஏனெனில் இந்த நாளில் செய்யப்படும் தானமானது, சூரிய கிரகணத்தினால் ஏற்படும் பாதகங்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல், மற்ற கிரக தோஷங்களையும் நீக்குகிறது. பலவித சிக்கல்களையும் சரிசெய்கிறது.
ALSO READ: நவம்பர் 30 அன்று 2020-ன் கடைசி சந்திர கிரகணம்: நேரம், முக்கியத்துவம், விவரம் இதோ
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR