அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதால் தலைநகரத்தில் வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வசதியாக தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் கோவைக்கு இடையே 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளிப் பண்டிகைக்காக 42 சிறப்பு ரயில்கள், தாமிரபரணி மஹா புஷ்கரம் விழாவுக்காக 18 சிறப்பு ரயில்களும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் சென்னை - திருநெல்வேலி இடையே நான்கு ரயில்களும், சென்னை - கோவை இடையே நான்கு ரயில்களும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.


புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘ரயில் பார்ட்னர்’ என்ற செயலி மூலம் ரயில்கள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், பாதுகாப்பு உதவி எண் ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.