இந்தியாவில் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட 23 ஆட்சி மொழிகள் உள்ளது. மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழிகளை அதிகாரப்பூர்வ மொழிகளாக பயன்படுத்துகின்றன. இந்நிலையில் இந்தியாவில் அழியும் நிலையில் 40-க்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யுனெஸ்கோ அமைப்பும் இது தொடர்பன பட்டியல் ஒன்றை தயார் செய்துள்ளது. அதில், தமிழகத்தில் பேசப்படும் தோடர், கோடா மொழிகள் மற்றும் கர்நாடகாவில் பேசப்படும் குருபா மொழி, ஆந்திராவில் பேசப்படும் கடபா, நாய்கி ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. 


மணிப்பூரில் பேசப்படும் ஏய்மோல், கோய்ரென், லாம்காங், லாங்ரோங், புரம் மற்றும் தாரோ ஆகிய 7 மொழிகளும், இமாச்சல் பிரதேசத்தில் பயன்பாட்டில் உள்ள பகஹதி, ஹன்டுரி, பங்வாளி மற்றும் சிர்மாயுடி ஆகிய 4 மொழிகளும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.


மேலும் அசாமில் பேசப்படும் டை நோரா, பான்கணி (உத்தரகண்ட்), பிர்ஹோர் (ஜார்கண்ட்), நிஹலி (மகாராஷ்டிரா), ருகா (மேகாலயா) மற்றும் டோட்டோ (மேற்கு வங்கம்) ஆகியன அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.