மகாராஷ்டிரா (கிரண் தாஜானே): நாசிக்கில் கடந்த சில நாட்களாக குளிர் அதிகரிக்கத் தொடங்கியது. அத்தகைய சூழ்நிலையில், கணபதி பாப்பாவை (Vinayaka) குளிரில் இருந்து பாதுகாக்க சூடான ஆடைகள் அணியப்படுகின்றன. நாசிக் வெள்ளி கணபதி கோவிலில் உள்ள பிள்ளையார் சிலைக்கு ஸ்வெட்டர் மற்றும் சால்வைகள் அணிவித்துள்ளனர். பிள்ளையாருக்கு குளிர் தாக்காமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கோயிலின் பூசாரி நரேந்திர சோன்வனே கூறுகையில், நாசிக்கில் குளிர் அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் குளிரியை உணர்கிறார். அதேபோல கடவுளும் குளிரை உணர்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் தான் கடவுள் விநாயகருக்கு ஆடைகள் அணிவித்துள்ளோம். பக்தர்களும் இறைவனுக்கு ஸ்வெட்டர்ஸ் கம்பல் மற்றும் சால்வைகளை பயபக்தியுடன் வழங்குகிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் இந்த ஆடைகள் கணபதி பாப்பாவின் சிலைக்கு அணியப்படுகின்றன எனக் கூறினார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது