குழந்தைகளுக்கான சிறப்பு படுக்கை வசதி : அறிமுகம் செய்தது ரயில்வே
குழந்தைகளை வசதியாக தூங்க வைக்க சிறப்பு படுக்கை வசதியை இந்திய வடக்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளியூர்களுக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ரயிலில் செல்பவர்கள் படும் அவதி சொல்லி முடியாது. குறிப்பாக 3 முதல் 5 வயதிலான குழந்தைகளுக்கு படுக்கை வசதி இல்லாததால் அவர்களை அருகில் படுக்க வைத்துக் கொண்டு தூங்குவது பெற்றோர்களுக்கு கடினமான விஷயமாக இருந்து வந்தது.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு
இந்த பிரச்சனையை சரிசெய்ய இந்திய ரயில்வே புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. பெற்றோர் படுக்கும் படுக்கைக்கு அருகே குழந்தைகளுக்காக சிறிய படுக்கை ஒன்றை அமைத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளை படுக்க வைப்பதால் கூடுதல் இடம் கிடைக்கும். இரவில் வசதியாக தூங்கவும் முடியும்.
இந்த குழந்தைப் படுக்கையில் முடிவில் குழந்தை கீழே விழுந்துவிடாமல் இருக்க சிறப்பு தடுப்பும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. லக்னோ - டெல்லி இடையில் ஓடும் ரயிலில் இந்த வசதி முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு ஏசி வகுப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதி உபயோகமாக இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். தேவைப்படாத நேரங்களில் இந்த குழந்தைப் படுக்கையை கீழ்நோக்கி மடித்து வைத்துவிடலாம்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குழந்தைப் படுக்கை 770 மிமீ நீளமும், 255 மிமீ அகலமும் கொண்டது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இந்த சிறப்பு வசதி பயனுள்ளதாக இருப்பதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR