குரு ராசி பரிவர்த்தனை 2022: ஜோதிட சாஸ்திரத்தில் வியாழன் கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வியாழன் ராசியில் ஏற்படும் மாற்றத்தின் பலன் 12 ராசிகளிலும் தெரியும். வியாழன் அறிவு, வளர்ச்சி, ஆசிரியர், குழந்தைகள், செல்வம், தர்மம் மற்றும் அறம் போன்றவற்றுடன் தொடர்புடையது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பகவானின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அளிக்கப்போகிறது. வியாழன் இவ்வாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். இனி குரு பகவானின் அடுத்த ராசி மாற்றம் ஏப்ரல் 2023 இல் தான் நடக்கும். அத்தகைய சூழ்நிலையில், வியாழன் கிரகம் சுமார் ஒரு வருடம் ஒரே ராசியில் இருக்கும். வியாழனின் இந்த நிலையால் பல ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள். அந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். 


ரிஷபம்:
வியாழன் ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11 ஆவது வீட்டில் நுழைந்துள்ளார். இது ஜோதிடத்தில் வருமானம் மற்றும் லாபத்துக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வியாழன் கிரகத்தின் தாக்கத்தால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். 


வேலையில் இருப்பவர்களுக்கும் இது நல்ல நேரமாக இருக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் பணி முறையில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். ஆராய்ச்சி துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். நாள்பட்ட நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.


மேலும் படிக்க | ஜூன் மாதம் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன 


மிதுனம்:
வியாழன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாழன் கிரகத்தின் அருளால் ஒரு வருடம் உங்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காது. வியாழன் உங்கள் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது வேலை மற்றும் பணிகளுக்கான ஸ்தானமாகும். 


ஆகையால், இந்த நேரத்தில் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். இருப்பினும், வேலையை மாற்றும்போது நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மார்க்கெட்டிங் மற்றும் மீடியா துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். மிதுன ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தின் படி, புதன் மற்றும் வியாழன் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே, இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது.


கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் கிரகம் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். உங்கள் ராசியிலிருந்து வியாழன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்திற்கான ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். 


நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது முடிவடையும். தொழில் சம்பந்தமான பயணங்கள் சாதகமாக அமையும். உணவு, ஹோட்டல்கள் அல்லது உணவகங்களுடன் தொடர்புடைய வணிகர்கள் லாபத்திற்கான வலுவான வாய்ப்புகளைக் கொண்டுள்ளனர். 


வியாழன் கிரகம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு அதிபதி. இது எதிரியின் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மகம் நட்சத்திரத்தில் பிறந்தவரா உங்கள் வாழ்க்கைத்துணை: அதிர்ஷ்டக்காரர் நீங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR