சனி வக்ர பெயர்ச்சி 2022: யாருக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து, முழு ராசிபலன் இதோ

Shani Vakra Peyarchi 2022: ஜூன் 5, 2022 அன்று, சனி பகவான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:16 மணிக்கு வக்கிர பெயர்ச்சியை மேற்கொள்வார். சனியின் வக்கிர பெயர்ச்சியால் எந்த ராசிக்கு எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2022, 07:21 PM IST
  • சனி பகவான் கர்மாவின் கிரமாக கருதப்படுகிறார்.
  • நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார்.
  • இப்போது அவர் வக்கிர பெயர்ச்சியை மேற்கொள்ள இருக்கிறார்.
சனி வக்ர பெயர்ச்சி 2022: யாருக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து, முழு ராசிபலன் இதோ title=

சனி வக்கிர பெயர்ச்சி 2022: சனி பகவான் கர்மாவின் கிரமாக கருதப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். இப்போது அவர் வக்கிர பெயர்ச்சியை மேற்கொள்ள இருக்கிறார். அதாவது, சனி பகவான் பிற்போகு நகர்வை துவங்கவுள்ளார். 

சனி பகவான் 141 நாட்களுக்கு பிற்போக்கு இயக்கத்தில் இருப்பார். அதாவது சனி பகவானின் நகர்வு தலைகீழாக இருக்கும். சனி பிற்போக்கு இயக்கத்தில் இருக்கும்போது, அவர் கஷ்டத்தில் இருப்பார் என்றும் ஒரு கூற்று உள்ளது. ஆகையால், அந்த வேளையில் அவரை கோபப்படுத்தக்கூடாது என்று கூறப்படுகிறது. 

பஞ்சாங்கத்தின்படி, ஜூன் 5, 2022 அன்று, சனி பகவான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:16 மணிக்கு வக்கிர பெயர்ச்சியை மேற்கொள்வார். சனியின் வக்கிர பெயர்ச்சியால் எந்த ராசிக்கு எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: தவறான செயல்களை தவிர்க்கவும். தற்போது ராகு உங்கள் ராசியில் உள்ளார். எனவே, எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருப்பது அவசியம். பலவீனமானவர்களுக்கு சேவை செய்யுங்கள்.

ரிஷபம்: பண விஷயத்தில் கவனமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் பெரிய மூலதனத்தை முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், அவசரப்பட வேண்டாம். அலுவலகத்தில் அனைவரிடமும் கண்ணியமாகப் பேசுங்கள்.

மிதுனம்: சனியின் வக்கிர பெயர்ச்சி நடக்கும் இந்த வேளையில், கர்மாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது மிதுன ராசிக்காரர்களுக்கு மிக அவசியமாகும். பொறுப்புகளை ஏற்று வாழ முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் சனி நிறைய கற்றுக்கொடுக்கப் போகிறார். கற்றுக்கொள்ள தயாராக இருங்கள்.

கடகம்: கடகத்தில் சனி தசை நடக்கிறது. எனவே சிறப்பு எச்சரிக்கை தேவை. கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க |சனியின் வக்ர பெயர்ச்சியினால் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

சிம்மம்: சனி பகவான் உங்கள் பொறுப்புகளை அதிகரிக்கப் போகிறார். அனைத்து வகையான தவறுகளிலிருந்தும் விலகி இருங்கள். பேராசை உணர்வு முற்றிலும் வேண்டாம். 

கன்னி: வேலை, வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் அமையும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வருமானம் கூடும். கடின உழைப்பை குறைய விடாதீர்கள்.

துலாம்: பணம் தொடர்பான வேலைகளை கவனமாக செய்ய வேண்டியிருக்கும். தடைகள் மற்றும் பிரச்சனைகள் வரலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசியில் சனி தசை நடக்கிறது. உடல்நலம் மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். திருமணம் தாமதமாகும் சூழ்நிலையும் ஏற்படலாம். அதிக அளவு தான தர்மம் செய்யுங்கள்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் இந்த காலத்தில் விதிகளையும் ஒழுக்கத்தையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. கோபமோ கர்வமோ ஆபத்தை விளைவிக்கும். அப்படி இருந்தால் காரியங்கள் கெட்டுப்போகும். காதல் துணையின் அதிருப்தியை சந்திக்க நேரிடும்.

கும்பம்: கும்ப ராசியிலும் ஏழரை நாட்டு சனி நடக்கிறது. இந்த நேரத்தில் சேமிப்பதில் சிக்கல் இருக்கலாம். தேவையற்ற செலவுகள் வரும். சிக்கனமாக இருப்பது நல்லது.

மீனம்: மீன ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கியுள்ளது. இந்த வேளையில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. வேலையிலும் தடைகள் வரலாம். பொறுமை காக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஜூன் மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப் போகுது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News