புதுடெல்லி: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! பாங்க் ஆஃப் இந்தியா (BOI) அரசு ஊழியர்களுக்காக ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி, ஊழியர்களுக்கான சிறப்பு சேலரி பிளஸ் அகவுண்ட் (Salary Plus Account Scheme) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், ஊழியர்கள் 1 கோடி ரூபாய் வரையிலான சலுகைகளை இலவசமாகப் பெறலாம். இந்த தகவலை BOI தனது அதிகாரப்பூர்வ ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு சம்பள கணக்கு பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Salary Plus Account Scheme


பேங்க் ஆஃப் இந்தியா (BOI) அதன் இணையதளத்தில் கொடுத்த தகவலின் படி, வங்கியின், BOI சேலரி பிளஸ் அகவுண்ட் திட்டத்தின் கீழ் மூன்று வகையான சம்பள கணக்கு வசதி உள்ளது. இந்த திட்டம் துணை ராணுவம், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கானது. இதன் மூலம், சம்பளக் கணக்கை பராமரிப்பதில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருக்கும். இந்த வசதி சம்பள கணக்கில் மட்டுமே கிடைக்கிறது.


1 கோடி வரை இலவச விபத்து காப்பீடு


BOI Salary Plus Account Scheme திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், சம்பளக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 30 லட்சம் வரை விபத்து மரண காப்பீட்டை வங்கி வழங்குகிறது. வங்கியின் ட்வீட் படி, சம்பள கணக்கு வைத்திருப்பவருக்கு ரூ .1 கோடி இலவச விமான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.


ALSO READ: பங்குச்சந்தையில் லாபம் காண Demat Account அவசியம்: திறப்பதற்கான முழு செயல்முறை இதோ


பல வசதிகள் கிடைக்கும்


1. BOI Salary Plus Account Scheme திட்டத்தின் கீழ், சம்பளக் கணக்கில் ரூ .2 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் வசதி உள்ளது.


2. ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ், உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பு இல்லாவிட்டாலும், நீங்கள் ரூ .2 லட்சம் வரை எடுக்கலாம்.


3. BOI, சம்பள கணக்கு வைத்திருப்பவருக்கு Gold International Credit Card-ஐ இலவசமாக வழங்குகிறது.


4. இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 100 காசோலைகள் இலவசமாக கிடைக்கும். மேலும், டிமேட் கணக்குகளுக்கு (Demat Account) ஏஎம்சி கட்டணங்கள் விதிக்கப்படாது.


தனியார் துறையின் சம்பள கணக்கு


மிக முக்கியமாக, தனியார் துறை ஊழியர்களும் பேங்க் ஆஃப் இந்தியாவின் சம்பளக் கணக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாதம் ரூ .10,000 சம்பாதிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் சம்பளக் கணக்கைத் தொடங்கலாம். இதில் குறைந்தபட்ச இருப்பு தேவை இல்லை. சம்பள கணக்கு வைத்திருப்பவர்,  ரூ .5 லட்சத்திற்கான குழு, தனிப்பட்ட விபத்து இறப்பு காப்பீட்டுத் தொகையை பெறுகிறார்.


ALSO READ: SBI Power Demat Account: அதிரடி கடன் வசதி, இலவச ATM Card, இன்னும் எக்கச்சக்க offers


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR