டெல்லியில் இருந்து புறப்படும் SpiceJet, IndiGo விமான சேவைகளில் திடீர் மாற்றம்!
பட்ஜெட் விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் இந்த வாரம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் T2 இலிருந்து விமான நிலையத்தின் டெர்மினல் T3-க்கு நடவடிக்கைகளை மாற்ற உள்ளது.
பட்ஜெட் விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் இந்த வாரம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் T2 இலிருந்து விமான நிலையத்தின் டெர்மினல் T3-க்கு நடவடிக்கைகளை மாற்ற உள்ளது.
ANI-ன் ட்விட்டர் பதிவின் படி, இண்டிகோ அதன் செயல்பாடுகளில் ஒரு பகுதியை மாற்றும், அதே நேரத்தில் ஸ்பைஸ்ஜெட் அதன் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் டெர்மினல் 2 முதல் டெர்மினல் 3-க்கு மாற்றும். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய விரிவாக்கம், மே 2019-க்குள் ஒரு நாளைக்கு 1500 விமானங்களை பார்க்க வாய்ப்புள்ளது. இந்த விரிவாக்கத்தின் காரணாம டெர்மினல் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
டெர்மினல்களில் மாற்றம் ஆனது வரும் செப்டம்பர் 5 முதல் நடைமுறைக்கு வரும். டெர்மினல் 1-இல் ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோவின் செயல்பாடுகள் முன்பைப் போலவே தொடரும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நமக்கு கிடைத்த தகவல்கள் படி, ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் - SG 8000 முதல் SG 8999 மற்றும் இண்டிகோ விமானங்கள் - 6E 5000 முதல் 6E 5999 வரை - டெர்மினர் 3-க்கு வெளியே இயங்கும், இண்டிகோ விமானங்கள் - 6E 2000 முதல் 6E 2999 வரை - டெர்மினல் 2-லிருந்து இயங்கும்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் CISF பாதுகாப்புக்கு ரூ .778 கோடி, AAI-யின் கீழ் உள்ள விமான நிலையங்கள் ரூ .90 கோடி நிலுவையில் உள்ளன.
தற்போது, IGI-யின் டெர்மினல் 3-லிருந்து மொத்தம் 184 விமானங்கள் இயக்கப்படுகின்றன. டெர்மினல்கள் மாற்றப்பட்ட பின்னர், T3 விமானங்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரிக்கும். இதில் 24 இண்டிகோ மற்றும் 32 ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் அடங்கும் என்று DIAL தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் செப்டம்பர் 5 முதல் நடைமுறைக்கு வந்த பிறகு பயணிகள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், DIAL தனது இணையதளத்தில் விமான இயக்கத்தின் மாற்றங்கள் குறித்து புதுப்பிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய இரு விமான நிறுவனங்களும் தங்கள் பயணிகளை SMS, தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தெரிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.