பூர்வ ஜென்ம பலன் என்பது நம்பக்கூடியதா? - இதோ உங்களுக்கான பதில்..
போன ஜென்மத்தில் நான் செய்த பாவம் தான் இந்த ஜென்மத்தில் என்னை ஆட்டிவைக்கிறது என கூறுவார்களே, அது உண்மையா?
போன ஜென்மத்தில் நான் செய்த பாவம் தான் இந்த ஜென்மத்தில் என்னை ஆட்டிவைக்கிறது என கூறுவார்களே, அது உண்மையா?
நம்பக்கூடியதே. ‘ஜனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம், பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா’ என்ற வாக்கியத்தை ஜென்ம ஜாதகத்தின் முதல் பக்கத்தில் காணலாம். இந்த வரிகளை எழுதிய பின்னரே ஜோதிடர்கள் (Astrologers) ஜாதகத்தை கணிக்கத் துவங்குவார்கள். தான் செய்த பூர்வ புண்ணியத்தின் பயனாக இந்த மானுட ஜென்மம் (Human genome) அதற்குரிய பலன்களை அனுபவிக்க உள்ளதை இந்த ஜாதகம் குறிக்கிறது என்பது இரண்டாவது வரியின் பொருள் ஆகும்.
எல்லா வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க இயலாமல் போவதும், வசதிகள் எதுவுமே இல்லாதவன் மன நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்வதும் இந்த பூர்வ ஜென்ம (Purva Jenma) புண்ணியத்தின் அடிப்படையில்தான். மேலும் நாம் செய்யும் பாவ புண்ணியங்களே அடுத்த ஜென்மத்தைத் தீர்மானிக்கிறது என்ற நம்பிக்கை இருப்பதால் இந்த ஜென்மத்திலாவது பாவத்தைக் குறைத்துக்கொண்டு புண்ணியத்தைச் செய்ய விழைவோம் என்பதால் இவ்வாறு சொல்லி வைத்தார்கள் என்று சில பகுத்தறிவுவாதிகள் சொல்வர்.
ALSO READ | “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்!
பூர்வ ஜென்மம் என்பது நிச்சயமாக உண்டு, அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை சாஸ்திரம் மட்டுமல்ல, சங்க இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன. ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பதே சிலப்பதிகாரத்தின் அடிப்படை கோட்பாடு. ஆக பூர்வ ஜென்ம பலன் என்பது நம்பக்கூடியதே என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR