இந்துக்கள் அனைவரின் வீடுகளிலும் தீபம் ஏற்றி பூஜை செய்வது பாரம்பரிய வழக்கம் ஆகும். நமது வீடுகளில் தீபம் ஏற்றக்கூடிய இடங்கள் மற்றும் தீபம் ஏற்றக்கூடாத இடங்களும் இருக்கிறது. தீபம் ஏற்றுவதால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் தன்னம்பிக்கையை ஏற்படுத்தகூடிய சிந்தனையை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முக்கூட்டு எண்ணெய் எனப்படும் பசு நெய் (Cow Ghee), விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகியவைகளை சமஅளவில் கலந்து தீபம் ஏற்றுவதால் தேவஆகர்ஸ்ணம் (Spiritual Information) குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும். கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.


ALSO READ | Spiritual Trees: 8 புனித மரங்கள் கொண்ட கோவில் எது?


வீடுகளில் தீபம் வைக்கும் இடங்கள்​


திண்ணைகளில் - நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில் - இரண்டு விளக்குகள்
நிலைப்படியில் - இரண்டு விளக்குகள்
வாசல் நடைகளில் - இரண்டு விளக்குகள்
முற்றத்தில் - நான்கு விளக்குகள்


தீபங்களின் எண்ணிக்கையும் அதன் நன்மையும்


பூஜையறையில் - இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.
சமையல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.


ALSO READ | குலதெய்வ பூஜை வழிபாட்டின் முக்கியத்துவம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR