குலதெய்வ பூஜை வழிபாட்டின் முக்கியத்துவம்!!

எந்தவொரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது.

Last Updated : Jan 30, 2020, 05:03 PM IST
குலதெய்வ பூஜை வழிபாட்டின் முக்கியத்துவம்!! title=

எந்தவொரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்லது.

குலதெய்வ பூஜை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அல்லது பங்காளிகள் ஒன்று கூடி நடத்துவது ஆகும். இது குடும்ப ஒற்றுமைக்கும் மிக பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த பூஜையின் அவசியம் என்ன என்றால் உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது உங்கள் குலதெய்வம்.

எந்தவொரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை விரதம் இருந்து வழிபாடு முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும் என்பது காலம்காலமாக பின்பற்றப்படும் நடைமுறை. வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதில் குலதெய்வத்திற்கு நிகர் எதுவுமில்லை. 

உங்களுடைய நட்சத்திரம் வரும் நாட்களில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம். அவ்வாறு இல்லை என்றால் பவுர்ணமி அல்லது அமாவாசை அன்று வழிபடலாம். மற்ற தெய்வத்தை பொருத்தவரை அர்ச்சனை செய்து சாமி கும்பிடுவோம். ஆனால் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து சாமி கும்பிடவேண்டும். எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்ல வேண்டும். எனவே குலதெய்வ வழிபாடு தான் முதலில் அடுத்த பரிகாரங்கள் எல்லாம் பிறகுதான் என்பதை மனதில் வையுங்கள்.

Trending News