பணக்காரர் ஆக வேண்டும் என்று கனவு காணாத மனிதர்கள் உலகில் இல்லை. பொருளாதார யுகத்தில் மனிதனின் முதல் தேவை பணமாக உள்ள நிலையில், பொருளை ஈட்ட அனைவரும் கடுமையாக உழைக்கிறார்கள். சிலருக்கு பிறப்பிலிருந்தே செல்வ செழிப்புடன் வலமான வாழ்க்கை வாழும்  நிலை இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல சமயங்களில் பணம் ஈட்ட செய்யும் முயற்சி தோல்வி அடைந்து விடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஜோதிட சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி செய்யும் சில பரிகாரங்கள் பூஜைகள் பணப் பற்றாக்குறையை சமாளிக்க  பெரும் உதவியாக இருக்கும். 


ஸ்ரீ யந்திரம் 


அன்னை மகாலக்ஷ்மியின் ஸ்ரீ யந்திரம் செல்வத்தைப் அள்ளிக் கொடுக்கும் அற்புதமாகக் கருதப்படுகிறது. உண்மையில் இந்த யந்திரம் தேவி மகாலட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது. இந்த யந்திரம் பழங்காலத்திலிருந்தே கடவுள் மற்றும் தெய்வ வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீ யந்திரத்தை தொடர்ந்து வழிபட்டால் நிச்சயம் பணம் கிடைக்கும்.


இன்பமும் முக்தியும் 


மத சாஸ்திரங்களின்படி, இந்த யந்திரத்தை ஸ்தாபித்து, அதை முறையாக வழிபடுபவர், லட்சுமி தேவியின் அருளால் இன்பமும் முக்தியும் பெறுகிறார். இதனுடன், அவரது வாழ்க்கையில் இருந்து நிதி சிக்கல்கள் நீங்குகின்றன. இது தவிர, வாழ்வின் அனைத்து வகை இன்பங்களும்  ஒருசேர வந்து சேருகின்றன.


மேலும் படிக்க | குரு உதயத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்


ஸ்ரீ யந்திரத்தை  வழிபடும் முறை


காலையில், ஸ்நானம் செய்த பிறகு ஸ்ரீ யந்திரத்தை அழகாக கோலமிட்ட பலகையின்மீது வைக்கவும்.  ஸ்ரீயந்திரத்தை ஒரு சிவப்பு துணியில் வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். ஸ்ரீ யந்திரத்தை வைப்பதற்கு முன் துணியின் மீது மீது கங்கா ஜலம் அல்லது பாலை சிறிது தெளிக்கவும். இதற்குப் பிறகு. ஸ்ரீ யந்திரத்தை பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவும். பின்னர் ஸ்ரீ யந்திரத்தை சிவப்பு சந்தனம், சிவப்பு வண்ண மலர்கள், அக்ஷதை கொண்டு வழிபடவும்.


அதன் பிறகு, அதன் மீது சிவப்பு நிற துணியை சாற்றவும்.  அதன் பிறகு, தூப-தீபத்துடன் ஸ்ரீயந்திரத்தை ஆரத்தி செய்யுங்கள். ஆரத்திக்குப் பிறகு, லக்ஷ்மி மந்திரம், ஸ்ரீசுக்தம் மற்றும் துர்கா சப்தசதி ஆகியவற்றைப் பாராயணம் செய்யவும். அதன் பிறகு, இந்த யந்திரத்தை தவறாமல் வழிபடவும். வழிபட்ட பிறகு, ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் நம:  ( ऊं श्रीं ह्रीं श्रीं नम: )  என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.


மேலும் படிக்க | தீராத பிரச்சனையையும் தீர்த்து வைக்கும் சில எளிய பரிகாரங்கள்..!!


ஸ்ரீ யந்திரத்தை பூஜிப்பதற்கான விதிகள்


ஸ்ரீ யந்திரத்தை ஸ்தாபனம் செய்து வழிபட எப்போதும் மங்கலமான நேரமே ஏற்றது.


பூஜைக்கு பிறகு இறைச்சி மற்றும் மதுபானங்களை உட்கொள்ளக்கூடாது. மேலும், வீட்டில் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.


சரியான வகையில் ஸ்ரீ யந்திரத்தை வணங்கினால் மட்டுமே விருப்பம் நிறைவேறும். 


ஸ்ரீ யந்திரத்தை  ஸ்ப்தாபனம் செய்த பிறகு, அதன் முன் தினமும் மந்திரங்களை உச்சரிப்பது அவசியம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதே நடக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR